பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி படைப்பின் விதைகள் ஆகியவற்றை ஒரு கலசத்தில் (கும்பம்) சேர்ந்து அக்குடத்தை (கும்பம்-குடம்) மேரு மலையின் உச்சியில் வைத்திருந்தார். பிரளய காலத்தில் இக்குடத்தை வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது. அது வெள்ளத்தில் மிதந்து தெற்கு நோக்கி வந்தது. வெள்ளம் வடிந்ததும் திருக்குடம் கும்பகோணத்தில் (கும்பம்-குடம்; கோணம் - மூக்கு) தங்கியது. தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் ஒர் அம்பெய்து திருக்குடத்தை உடைத்தருளினார். குடத்திலிந்த அமுதம் இரண்டு பிரிவாகப் பாய்ந்து ஒன்று மகாமகக் குளமாகவும், மற்றொன்று பொற்றாமரைக் குளமாகவும் அமைந்துவிட்டன. உடைந்த குடத்து ஒடுகளையும் அமிர்தத்தையும் சிவலிங்கமாக்கினார். கும்பத்திலிருந்த பெரு மான் கும்பேசர் என்ற பெயருடன் கோயில் கொண்டு விட்டார். ஊரும் கும்பகோணம் என்ற திருப்பெயரைப் பெற்றது. பக்திசாரர் என்ற சிறப்புத் திருநாமம் பெற்ற திருமழிசை யாழ்வார் இத்திருத்தலத்திற்கு எழுந்தருளுகின்றார்; ஆராவ முதனைச் சேவிக்கின்றார். பெருமான் வாய் திறந்து ஒரு சொல் பேசாமலும் கைகோலி அனைத்தருளாமலும் அயர்ந்து கண் வளரக் காண்கின்றார் ஆழ்வார். இவர் "இஃது அர்ச்சாரவதார சமாதி' என்று திருவுள்ளம் பற்றாமல், ஏதோ அளவற்ற சிரமத்தால் இங்ங்னம் ஆழ்ந்து உறங்குவதாகக் கருதி, நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய் இடந்த மெய்கு லுங்கவோ? விலங்கு மால்வ ரைச்சுரம் கடந்த கால்ப ரந்தகா விரிக்க ரைக்கு டந்தையுள் கிடந்த வாறெழுந் திருந்து பேசு வாழி கேசனே." (ஞாலம்-பூமிப் பிராட்டி; ஏனம்-பன்றி; இடந்த-தோண்டித் துக்கின: மெய்-திருமேனி; விலங்கு-தடை மால்-பெரிய மலை; சுரம்-பாலை நிலம்; கால்-வாய்க்கால்) என்று பாடுகின்றார். பக்தன் பாட்டு வீணாகுமா? கிடந்தவாறு எழுந்திருந்து பேசு' என்ற ஆழ்வாரின் வேண்டுகோளுக்கு 7. திருச். விரு.61.