பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குடந்தை ஆராவமுதன் 81 சேர்த்தியைச் சொன்னபடியாம். ஈண்டு அன்னம் என்றது பெருமானை, துணை என்றது பிராட்டியை. நம்முடைய குற்றங்களைப் பொறுப்பிப்பவளும் பொறுப்பவனும் பிரியாது வாழும் இடம் குடந்தை என்றபடி. ஏனைய திருப்பதிகளைக் காட்டிலும் திருக்குடந்தையில் இந்த ஆழ்வாருக்கு ஆதரம் மிக்கது. முதல் திருமொழியில் இங்ங்னம் பேசிய ஆழ்வார் இறுதிப் பிரபந்தமாகிய திருநெடுந்தாண்டகத்திலும் 'தண்குடந்தைக் கிடந்த மாலை, நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே' என்று நாயகி நிலையில் திருக்குடந்தைக் கிடந்த மாலைப் பேசித் தலைக் கட்டுவதால் இந்த ஆதரம் உறுதிப்படுகின்றது. பரகால நாயகி நிலையிலும், பெற்றேன்வாய்ச் சொல்இறையும் பேசக் கேளாள்; பேர்பாடி தன்குடந்தை நகரும் பாடி பொற்றா மரைக்கயம்நீர் ஆடப் போனாள்; பொருஅற்றாள் என்மகள்.உம் பொன்னும் அஃதே." (இறை - சிறிது; பேர் திருப்பேர் நகர் பொற்றாமரைக் குளம்-திருக்குளம்; பொரு ஒப்பு) என்று தாய்ப் பாசுரமாகப் பேசுவர் ஆழ்வார். இங்கு ஆழ்வார் நாயகி எம்பெருமானையே பொற்றாமரைக் கயுமாகப்’ பேசுகின்றாள் என்பது பொருந்தும். அகப்பொருளில் புணர்ச்சியைச் சுனையாடல்’ என்றும், நீராட்டம்' என்றும் பேசுகின்றோமல்லவா? எம்பெருமானோடு கலவி செய்ய விரும்புவதையே இங்குப் பொற்றாமரைக் கயம் நீராட போவதாகச் சொல்லுகின்றாள். இங்கு இன்சுவை மிக்க பெரிய வாச்சான் பிள்ளையின் வியாக்கியானம்: 'மகள் அணியரங்கம் ஆடுதுமோ?’ என்று ஊரைச் சொன்னாள்; தான் பொற்றாமரைக் கயமென்று பெரிய பெருமாளைச் சொல்லுகின்றாள்; தயரதன் பெற்ற மரகத மணித்தடம் (திருவாய். 10, 1 : 8) என்றும், 'வாசத் தடம்போல் வருவானே (திருவாய். 8.5 : 1) என்றும் தடாகமாகச் சொல்லக் கடவதிறே' என்பதாம். மேலும் 'உம்பொன்’ என்கின்றது அல்லாத ஆழ்வார்களை; மத்துறு கடை வெண்ணெய் களவினிலுரவிடை யாப்புண்டு, எத்திறம்! 15. திருநெடுந். 29. 16. மேலது 19. சுப்பு - 7