பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி சூரியனுடைய கிரணங்களை மறைத்து நிழல் செய்கின்றன (5). இளமகளிர் நடனமாடுங்கால் அவர்கள் கால்களில் அணிந்திருக்கும் தண்டைச் சிலம்பின் ஒலியும், வேறு சிலர் பந்தடிக்குங்கால் அவர்கள் கைகளில் அணிந்திருக்கும் வளைகளின் ஓசையும் எம்மருங்கும் கேட்கப்பெறும் (7). அடுத்து, இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பற்றிப் பேசுகின்றார் ஆழ்வார். இங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் பெருவள்ளல்; இவனது திருநாமம் புருடோத்தமன் என்பது. வள்ளண்மை மிக்க எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் தலமாதலால் இத்திருத்தலமும் 'வண்புருடோத்தமம் என்ற திருநாமம் பெற்றது. இந்த எம்பெருமானே பெரிய கடலில் சேதுகட்டி இலங்கையை அடைந்து அந்நகரின் தலைவனான இராவணன் தலைகளை அறுத்துத் தள்ளினவன்; அவன் தம்பி வீடணனுக்கும் முடி சூட்டியவன் (1). யமுனை நதிக்கரையில், பல்ல வந்திகழ் பூங்கடம் பேறிஅக் காளியன்பன அரங்கில் ஒல்லை வந்துறப் பாய்ந்தரு நடஞ்செய்த உம்பர்கோனே (2) (பல்லவம் - தளிர்கள், பூகடம்பு - பூத்த கடம்பு பணம் - படம், ஒல்லை - விரைவாக, உம்பர்கோன் - தேவாதி தேவன்) ஈண்டு எழுந்தருளியிருப்பவன். கண்ணன் ஏறிய கடப்பமரம் காளியனின் நஞ்சாகிய நெருப்பினால் கொளுத்தப்பெற்று இலை, பூ, காய், கனி முதலியவை ஒன்றுமின்றி மொட்டை மரமாக இருந்தாலும், கண்ணபிரான் அதன்மீது ஏறுங்கால் அவன் திருவடி பட்டமாத்திரத்தில் 'பல்லவம் திகழ பூங்கடப்பாக மாறிற்று என்பது ஆழ்வார் திருவுள்ளம் என்பதையும் சிந்திக்கின்றோம். தேவேந்திரனுக்குப் பலியிடவேண்டுமென்று இடையர்கள் சமைத்த சோற்றை முழுவதும் திருவமுது செய்தவன்; கோவர்த்தன மலையைக் குடையாகக் கவித்து ஆநிரைகளைக் கல்மாரியினின்றும் காத்தவன் (3). குவலயாபீடம் என்ற யானையின் கொம்புகளைப் பறித்து அந்த யானையினையும் அதன் பாகனையும் கொன்றழித்தவன்; அரண்மனையினுள் புகுந்து சானுரன் முஷ்டிகன் என்ற மல்லர்களை ஒருசேர முடித்தவன்; அதன் பிறகு கம்சனை அரியணையின் மீதிருந்து தள்ளி அவனையும் உதைத்துத் தள்ளி உயிர் குடித்தவன் (4). சக்கரத்தில் ஆவேசித்துத் தன்னைக் கொல்லக் காத்திருந்த சகடாசுரனை அச்சுக்கரத்தை உந்தித் தள்ளி அவனை வானுலகிற்கு அனுப்பிய கோமான், பானாசுரனுக்குத் துணையாக