பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கூர்ப் புருடோத்தமன் 85 வந்த உருத்திரனை அவன் சேனைகளோடும் சுற்றத்தாரோடும் தோற்றோடச் செய்து வாணனின் ஆயிரந்தோள்களையும் துணித்தொழித்த பெருமான் (5). மாவலியிடம் மூவடி மண் நீரேற்றுப் பெற்று திருக்கையில் நீர் விழுந்தவுடன் ஓங்கி உலகளந்த உத்தமன், இவன் திருவடி நான்முகன் உலகளவும் செல்லும்போது நான்முகன் அத்திருவடியை மலர்களிட்டு வணங்கித் துதிக்கவும், அத்திருவடியினின்றும் கங்கை நதி பெருகும்படியாகவும் செய்த வித்தகன் (6). அச்சம் என்பதை ஒருநாளும் கனவிலும் கண்டறியாத பெருமிடுக்கனான இரணியனின் நெஞ்சு உறையும்படியாக அவனது மார்பை இருபிளவாகப் பிளந்து குருதி வெள்ளத்தைப் பெருக்கின நரசிம்மனும் இவனே, கம்சனது ஏவலினால் குதிரை வடிவங்கொண்டு தன்னைக் கொல்லும் பொருட்டு வந்த கேசி என்னும் அசுரனைக் கொன்றொழித்தவனும் இந்த எம்பெருமானே (7). சிவனது சாபந் தீரப் பிட்சையளித்த பெருமான்; நம்முடைய பாவங்களையும் தொலைக்க வேண்டியே ஈண்டு எழுந்தருளியிருப்பவன் (8). இந்துவார் சடை ஈசனைப் பயந்தவன் நான்முகன்; அந்த நான்முகனையே தனது திருநாபிக் கமலத்தில் உண்டாக்கின பெருமான் (9). இங்ங்னம் கிருஷ்ணாவதாரச் சேஷ்டிதங்களையும், இராமாவதார தீரச்செயல்களையும், நரசிம்மாவதாரப் பெருமையினையும், வாமன - திரிவிக்கிரமாவதார மகிமையினையும் ஒருசேர அநுபவிக்கும் ஆழ்வார் வைணவ சமயத்தின் கடவுள் தத்துவத்தையே விளக்கிவிடுகின்றார். எல்லா நிலை எம்பெருமான்களும் அர்ச்சை நிலையில் புருடோத்தமனாக எழுந்தருளியிருப்பதை எடுத்துக்காட்டுகின்றார். ஆழ்வார் அநுபவித்த நிலையை நாமும் அநுபவித்த நிலையில் திருக்கோயிலில் நுழைகின்றோம். கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் புருடோத்தமனை வணங்கி வழிபடுகின்றோம். தாயாரின் திருநாமம் புருடோத்தம நாயகி. இந்தத் தாயாருக்கு ஏனோ தனிப் GLuí Óðvøa). Mrs and Mr. Purushothaman Grøm, 505udor அழைப்பிதழ்களில் போடும் மரபையொட்டித் தம் பெயரை மறைத்துக்கொண்டனர் போலும். இங்குள்ள உற்சவர் பேரெழில் மிக்க பெருமான். எம்பெருமான் சந்நிதியில் ஆழ்வார் பாசுரங்களை மிடற்றொலி கொண்டு ஓதி உளங்கரைகின்றோம். இந்நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரமும் நினைவிற்கு வருகின்றது.