பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கூர் நந்தா விளக்கு 95 சிறுமாமனிசராகிய நம்மாழ்வார் இவ்வினாக்கட்குத் தரும் மறுமொழியாகிய அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்பதில், உடலினால் ஏற்படும் சுக - துக்கங்களையே உணவாகக்கொண்டு உடம்பையே பெரிதென எண்ணி வாழ்ந்து கொண்டிருப்பது உயிரினங்களின் தன்மையாகும் என்ற கருத்து அடங்கியுள்ளது. இது தவிர தன் நிலையும் அடங்கியுள்ளது. "என் நிலை அங்ங்னமன்று. என் உடம்பு என்னைக் கட்டுப்படுத்தாது. என் உயிர் என் உடம்பின் வசப்படாது. செத்ததின் வயிற்றில் அசித்து சம்பந்தமான உடலுடன் - சிறியதான சீவான்மா பிறந்தால் - அதாவது எனக்குப் பிறவி ஏற்பட்டாலும் செத்ததுடன் சேராது இச்சிறியது. ஆதலின் செத்ததின் தொடர்பால் ஏற்படும் சுக துக்கங்களை உணவாகக் கொள்ளாது. இது காரணமாக இந்த உடலையே தஞ்சம் எனவும் கொள்ளாது. ஆயின் சடகோபன் என்ற ஆன்மா தின்ன வேண்டியது என்ன? கிடக்க வேண்டியது எங்கே? அதாவது, எதனைப் புருஷார்த்தம் எனக் கருதும்? எதனை உபாயமாகப் பற்றும்? 'அத்தைத் தின்று அங்கே கிடக்கும் உடலுக்குப் பிராணவாயு - உயிர்க்காற்று - போன்று சீவான்மாவிற்குப் பரமாத்தும ஞானம் பிராணனாய் உள்ளது. இதனை மேலும் தெளிவாக்குவோம். திருமந்திரத்திலுள்ள 'ஓம்' என்ற பிரணவத்தில் அ, உ, ம என்ற மூன்று எழுத்துகள் உள்ளன. இதில் அகாரம் திருமாலைக் குறிக்கும். இந்த அகாரம் ஆய’ என்னும் நான்காம் வேற்றுமையை (சதுர்த்தியை) இறுதியில் பெற்றுள்ள 'நாராயணாய’ (நாராயணசஆய) என்னும் பதத்தின் சுருக்கமாகும். ஆதலின் 'நாராயணாய என்னும் பதத்திலுள்ள வேற்றுமை உருபு இவ்வகாரத்தில் மறைந்து கிடக்கின்றது. மறைந்து கிடக்கும் இந்த வேற்றுமை சேஷத்துவத்தையும் உகாரம் அந்த சேஷத்துவத்தின் அநந் யார்ஹத்துவத்தையும் மகாரம் ஞானவானாகிய சீவான்மாவையும் குறிக்கும். எனவே, மகாரம் உணர்த்தும் சீவான்மா அத்தைத் தின்று அகாரம் உணர்த்தும் திருமாலின் அனந்த கல்யாண 2. சிறுமாமணிசர் என்பது நம்மாழ்வார் பிரயோகம் (திருவாய் 8.10:3). திருமேனி சிறுத்து ஞானம் பெருத்திருக்கின்ற சிறியாச்சான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார் போல்வார். முதலியாண்டான் எம்பார் முதலிய பெரியோர். எம்பெருமான் பக்கல் ஈடுபடுவதில் பரமபதத்து நித்திய சூரிகளைப் போலுதலால் இவர்களும் அன்னவரே. ஆகவே, வடிவு சிறுத்து மகிமை பெருத்தவர்களும் மனிதர் என்று பார்க்கும்போது சிறுமை தோன்றினும், பகவத் பக்தி ஞானம் அநுட்டானம் முதலிய நற்குணங்களைப் பார்க்கும்போது மேன்மை பெற்று விளங்குபவர்கள் இது பட்டருக்கு அவருடைய திருத்தந்தையார் கூரத்தாழ்வானின் விளக்கம் - ஈடுகாண்க.) 3. சேஷத்துவம் - பிறருக்கு அடிமையாயிருத்தல் 4. அநந்யார்வரத்துவம் , மற்றவருக்கில்லாமல் ஈசுவரனுக்கே உரிததாயிருத்தல்.