பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி தீர்த்தமாடி மகிழ்ந்த பிரான் (5.6). யமுனையின் ஒரு மடுவிலிருந்து கொண்டு அம்மடு மழுவதையும் தன் நச்சுத் தீயால் கொதிப்பித்துக் கொடுமை புரிந்து வந்த காளியன் என்ற நாகத்தின் கொழுப்பை அடக்கி அதன் தலைமேல் நாட்டியமாடிய பெருமான் (7). சுருண்ட கூந்தலையுடைய இடைச்சியரின் ஆடைகளை அபகரித்தவன்; அவர்தம் சிற்றில்களைச் சிதைத்தவன்; முற்றா இளம் பெண்டிருக்கு விளையாட்டையும் ஆசைப் பெருக்கையும் விளைவித்த பெருமான் (8), ஏழு காளைகளை அடக்கி நப்பின்னைப் பிராட்டியின் மெல்லிய புயங்களை விரும்பி அணைத்தவன்; சுடர் ஆழியையும் ஒண் சங்கையும் தாங்கி நிற்பவன் (9). இந்த அநுபவத்துடன் திருக்கோயிலில் நுழைந்து கிழக்கு நோக்கிய திருமுக மண்டலங்கொண்டு வீற்றிருந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் நந்தா விளக்குப் பெருமாளை வணங்குகின்றோம். இத்திருப்பெயர் திருமங்கையாழ்வாரால் சூட்டப்பெற்றதாகும். இந்தப் பெருமானுக்கு நரநாராயணன் என்ற திருநாமமும் உண்டு. தாயாரின் திருநாமம், புண்டரீகவல்லி. இவரையும் சேவித்து இவருடைய திருவருளுக்குப் பாத்திரர்களாகின்றோம். இக்கோயிலின் உற்சவர் குள்ளமாயும் மிக அமைதியான முகத்தோற்றத்துடனும் இருக்கின்றார். எம்பெருமான் சந்நிதியில் ஆழ்வார் பாசுரங்களை மிடற்றொலி கொண்டு ஓதி உளங் கரைகின்றோம். “மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே' என்று ஆழ்வாரைப் பின்பற்றி ஒரு தட வைக்கு ஒன்பது தடவையாக நம் மனத்தை ஆற்றுப்படுத்துகின்றோம். இந்நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரமும் நினைவிற்கு வர, அதனையும் ஒதுகின்றோம். சிரே தருங்கதியில் சேருகைக்கு நானுன்னை நேரே வணங்கினேன் நெஞ்சே நீ - பாரில் அணிமாடக் கோயில் அரங்கனார் நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கு." (சீர் - சிறப்பு கதி - முத்தி; நேரே - நன்றாக; பாரில் . உலகில்; அணி , அழகிய அரங்கனார், அரங்கநாதன், வணங்கு - தொழு) “நாங்கூர்த் திருப்பதியை வணங்குவதற்கு நீ இசைவாயாயின் நமக்குத் தவறாமல் நற்கதி வாய்க்கும்” என்று தம் நெஞ்சை நோக்கி இதம் உரைக்கின்றார் அய்யங்கார். எல்லாவற்றிற்கும் மனமே காரணமாதலால், ஆழ்வார் நெஞ்சை வணங்கி வேண்டுகின்றனர். இவ்விடத்தில், 13. நூற். திரு. அந். 30