பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி பார்த்தனுடைய தேரில் தலைவனான கண்ணன் முன்பும் அடியனான பார்த்தன் பின்பும் வீற்றிருந்ததுபோல, பிரணவத்தில் தலைவனான பகவானைக் கூறும் அகாரம் முன்பும் அடியனான சீவனைக் கூறும் மகாரம் பின்பும் இருப்பதால் பிரணவத்திற்குப் பார்த்தன் தேரை ஒப்பிடுவது முன்னோர்களின் வழக்காக அமைந்தது. இந்த எண்ணங்கள் நம் மனத்தில் குமிழியிட்ட வண்ணம் திருத்தெற்றியம்பலம் என்னும் திவ்விய தேசத்திற்கு வருகின்றோம். இத்திருத்தலமும் சீகாழி இருப்பூர்தி நிலையத்தினின்றும் கீழ்த்திசையில் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திருமங்கையாழ்வார் மட்டிலுமே இத்திருத்தல எம்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார். இவர்தம் திருப்பாசுரங்களில் ஆழங்கால்படுகின்றோம். இத்திருத்தலத்தின் சோலை வளம், நகர்வளம் எம்பெருமானின் பெருமை இவற்றைப் பாசுரங்களில் காணலாம். முதலில் வயல் - சோலை வளத்தில் ஈடுபடுவோம். நூற்றிதழ்கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்(து) இளங்கமுகின் முதுபாளை பகுவாய் நண்டின் சேற்றளையில் வெண்முத்தம் சிந்து நாங்கூர்த் திருத்தெற்றி அம்பலம்." (கமுகு - பாக்கு பகுவாய் - விரிந்த வாய் அளை - வளை) வயலிலுள்ள நண்டுகள் உணவிற்காகத் தாமரைப் பூவில் சென்று புகுவது உண்டு; அங்ங்னம் போயிருக்கும்போது பாக்குப் பாளைகளினின்றும் உதிரும் வெண்முத்துகள் இறைக்கப்பட்டு நண்டின் வளை மூடப்பெறுகின்றது என்று கூறுகின்றார் ஆழ்வார். திருநாங்கூர் வயல்களில் நெற்பயிர்கள் செழித்து வளர்கின்றன, அந்த நெற்பயிர்கள்மேல் கருநெய்தற்பூக்கள் வரிசை வரிசையாய்ப் படர்ந்துள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வண்டுகளின் ஆரவாரமும், பூக்கொய்தற்பொருட்டுச் செல்லும் மங்கையரின் பாதச் சிலம்புகளின் ஒலியும் சேர்ந்து தொனிக்கின்றன (2). திருநாங்கூரைச் சுற்றிலும் தென்னை மரங்களும் மாமரங்களும் செறிந்து கிடக்கின்றன; ஓங்கியிருக்கும் தென்னை மரங்களினின்று தேங்காய் நெற்றுகள் மாமரங்களின் மீது வீழ்கின்றன; அந்த அதிர்ச்சியினால் மாம்பழங்கள் உதிர்ந்து வீழ்கின்றன; அவற்றையெல்லாம் திரட்டி உருட்டிக் கொண்டும், மற்றும் பலவகையான மலர்களையடித்துக் கொண்டும் பெருவெள்ளமாகப் பாய்ந்து வரும் காவிரியாற்றுக் கால்வாய்களை 4. பெரி. திரு. 4.4:1