பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி கொண்டு நஞ்சு தீற்றிய முலை கொடுக்க வந்த பூதனையின் உயிர் குடித்தவன் (2). திருவாய்ப் பாடியிலுள்ள சிறுகுடில்களில் தந்திரமாக நுழைந்து வெண்ணெயை வாரியுண்பதும், மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம்இடம் புக்கு கச்சொடு பட்டைக் கிழிடதது காம்பு துகில் அவைகீறி நிச்சலும் தீமைகள்" (மச்சு - நடுநிலை; மாளிகை - மேல் நிலை: சச்சு - முலைக் கச்சு பட்டு பட்டை, காம்புதுகில் - கரைகட்டின சேலை; கீறி - கிழித்து; நிச்சலும் - நாடோறும், என்றபடியே மகளிரிடத்தில் சில தீம்புகளைச் செய்வதுமாய் இங்ங்னம் திருவாய்ப்பாடி முழுவதும் நலிவு படுத்திய நாராயணனே இத்திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பவன் (3). முன்பொருகால் நப்பின்னைப் பிராட்டியைத் திருமணம் புரிவதற்குக் கன்யாசுல்கமாக வைக்கப் பெற்றிருந்த ஏழு காளைகளையடக்கி அப்பிராட்டியை மணம் புரிந்தவன் (4). பெரிய பிராட்டியாரோடும் பின்னைப் பிராட்டியாரோடும் நித்தமும் கலவி புரிந்தும் இளமை மாறாத பெருமான் (5). இராமன் என்ற ஒரு சிறு பயல் பூமியை எல்லாம் ஆள்பவனாக நினைத்து அகங்காரப்படுகின்றான்; அதை அறிந்தும் அவனைத் தண்டியாமல் பொறுத்திருப்பவன் அரக்கர்கட்குத் தலைவனாவனோ? என்று கிளர்ந்தெழுந்த இராவணனது மலைபோன்ற இருபது தலைகளையும் ஒரே சமயத்தில் அறுத்தொழித்த தனி வீரன் (6). மாணி நிலைக்கு உரிய கோலத்துடன் வாமன உருவங்கொண்டு மாவலியின் யாக பூமிக்குச் சென்று பூமி தானம் பெற்ற பெருமான் (7). ஆழ்வாரின் வராக அவதார ஈடுபாடு மிகவும் அற்புதமானது. சிலம்பினிடைச் சிறுபரல்போல் பெரிய மேரு திருக்குளம்பில் கணகணப்பத் திருவா காரம் குலுங்கநில மடந்தைதனை இடந்து புல்கிக் கோட்டிடைவைத் தருளியனம் கோமான்' (சிலம்பின் இடை - தண்டைச் சிலம்பின் நடுவில் பரல் பருக்கைகய்; திருக்குளம்பு - அழகிய குளம்பு திரு - இலக்குமி; ஆகாரம் - உடம்பு நிலமடந்தை - பூமிப் பிராட்டி, இடந்து - கோட்டால் குத்தி யெடுத்து; புல்கி - தழுவி) என்று கூறுவர் ஆழ்வார். இதில் வராக அவதாரமாகிய பேருருவத்தைக் காட்டுகின்றார். இந்தக் கோல வராகத்தின் திருக்குளம்பில் மேருமலை தண்டைச் சிலம்பின் நடுவிலிட்ட பருக்கைக் கல்போன்று கணகணவென்று ஒலிக்குமாம்; திருமார்பில் பிராட்டியிருக்கும் இருப்பு குலுங்குமாம். இந்த நிலையில் அண்ட 6. பெரியாழ். திரு. 2.7:3 7. பெரி. திரு. 4.4:8