பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்பொன் செய்கோயில் பேரருளாளன் 109 இந்த ஐந்து குணங்களால் எம்பெருமானது சொருபத்தை அறிந்தபின் செளலப்பியம், செளசீல்யம், வாத்சல்யம், சுவாமித்துவம் முதலிய அளவற்ற திருக்கல்யாண குணங்களைக் கொண்டு அவன் பெருமை அறியப் பெறும். இந்தத் திருக்குணங்கள் நிருபிதஸ்வரூப விசேஷணம்’ ஆகும். இவற்றையும் விளக்குவோம். இவற்றுள் செளலப்பியம் என்பது, எளியனாயிருக்கும் இருப்பு. இது, கண்ணிற்குப் புலனாகாதிருக்கும் ஈசுவரன், தன் திவ்விய மங்கள விக்கிரகத்தை, சேதநன் தன் கண்களாலே கண்டு பற்றுதற்கேற்ப எளியனாயிருத்தல். இறைவன் தான் இருக்கும் பரமபதத்தை விட்டுச் சமுசாரிகளிடையில் வந்து அவதரித்துத் தன்னை எளியனாக்குகின்றான். இஃது, ஈசுவரன் நம் ஊனக் கண்களுக்குப் புலனாகாதவன், நாம் அவனைப் பற்றுதல் யாங்ங்னம்? எனச் சேதநன் பின்னிடாதவாறு எம்பெருமானை நேருக்குநேரே கண்டு பற்றுமாறு செய்கின்றது, இங்ங்னம் செய்வன இராமகிருஷ்ணாவதாரங்களும், அர்ச்சைகளும் ஆகும். செளசீல்யம் என்பது, உயர்ந்தவன் தாழ்ந்தவனோடு புரையறக் கலக்கை, இந்த செளசீல்யம் இரு வகைப்படும்; நித்திய விபூதி, லீலாவிபூதி இவற்றிற்குச் சுவாமியாய்ப் பெரிய பிராட்டியாரை முக்கியத் துணைவியாய்க் கொண்டவனாய்த் தடை சிறிதுமற்ற சுவாதந்திரியமாகின்ற தேஜசை உடையவனாய் இருக்கும் பரமபுருடன், தன் பெருமையையும் தன்னோடு கலக்கும் சீவான்மாவின் சிறுமையையும் நோக்காது, தன் பேறாக அவனுடன் புரையறக் கலத்தல் ஒருவகை. சேதநன் விருப்பமின்றி இருப்பினும், பகவானே சென்று அவனோடு புரையறக் கலத்தல் மற்றொரு வகை. முந்தியதற்குப் பாத்திரமானவர்கள் ஞானிகள்; பிந்தியதற்குப் பாத்திரமானவர்கள் சமுசாரிகள். வாத்சல்யம் என்பது, கன்றினிடத்தில் பசு இருக்கும் இருப்பு. இதை விளக்குவோம். சிறிது மலங்கலந்த புல் முதலியவற்றையும் தீண்டாத தாய்ப்பசு, தான், ஈன்ற கன்றின் உடலிலுள்ள வழுவை விருப்புடன் தன் நாவினால் நக்கி, அக்கன்றைத் தூய்மைப் படுத்துகின்றது. அஃது அத்துடன் நிற்கின்றதா, தன் இனிய பாலையும் அதற்கீந்து, அதை வளர்ப்பதுடன், அதன் எதிரில் வருபவரைக் கொம்பினால் முட்டித் தள்ளியும், அதற்கு முன் தான் ஈன்று கன்று வரினும், அதை உதைத்துத் துரத்தியும் அவ்விளங்கன்றைக் காக்கின்றது. இங்ங்னமே பகவானும், தன்னை வந்தடைந்த சேதநனின் குற்றங்களைப் பாராமல், அவற்றைப்