பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கூர்க் குடமாடும் கூத்தன் 115 குணங்களையுடைய எம்பெருமான் இத்தத்துவங்களை இயக்கும் தன்மை. இரண்டாம் பத்து இதனை நுவல்கின்றது. ‘எம்பெருமான் நாரணற்கு (2-1:7) என்றும், எம்பிரான் எம்மான் நாராயணனாலே’ (27:1) என்றும், நாரணன் முழுவேழுலகுக்கும் நாதன் (2-72) என்றும் நாராயணனின் இயக்கும் தன்மை கூறப் பெறுகின்றது. 3. சரணெள எல்லா உலகங்கட்கும் புகலிடமான நாராயணனுடைய இரண்டு திருவடித் தாமரைகள் பற்றி மூன்றாம் பத்து கூறுகின்றது. நாண்மலராம் அடித்தாமரை (3-39) என்றும், அங்கதிர் அடியன் (343) என்றும், அவன் பாத பங்கயம் (3. 6:4) என்றும், அன்று தேர் கடவிய பெருமான் கணை கழல் (3. 6:10) என்றும், மூவுலகும் தொழுதேத்தும் சீர் அடியான் (3.8:1) என்றும் கூறப் பெற்றிருத்தலைக் காணலாம். 4. சரணம் : அத்திருவடிகளே உபாயமாக இருத்தல். நான்காம் பத்தால் இஃது அறியப் பெறுகின்றது. இலங்கைநகர் அம்பு எரி உய்த்தவர் (4.2.6) என்றும், வல்வினை தீர்க்குங் கண்ணனை (4. 4:11) என்றும், தொல்வினை தீர (4-4:11) என்றும், வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வியவே (4-52) என்றும், மேவி நின்று தொழுவார் வினை போக (454) என்றும் பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் (4.7:7) என்றும், நோயே மூப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழிய (4.97) என்றும், வேட்கை எல்லாம் விடுத்து கூட்டறிய திருவடிக்கண் கூட்டினை (499) என்றும், அஃதே உய்யப் புகும் ஆறு (4-1:11) என்றும், உய்பு உபாயம் மற்று இன்மை தேறி (4-3:11) என்றும் விருப்பு இல்லாதவற்றை நீக்கி விருப்பு உள்ளனவற்றைப் பெறுதல் செய்தலாகின்ற தன்மையையுடைய உபாயத்தன்மை இதில் சொல்லப் பெற்றிருப்பதைக் காணலாம். 5. பிரபத்யே : அத்திருவடிகளைப் பற்றிய ஆன்மாவின் வேண்டுதலை உள்ளடக்கியுள்ள துணிவு. இஃது ஐந்தாம் பத்தால் உணர்த்தப் பெறுகின்றது. தமியேனுக்கு அருளாய் (5-72) என்றும், “ஆறு என நின்பாதமே சரணாக (5.7:10) என்றும், உன்னால் அல்லால் (5.83) என்றும், கழல்கள் அவையே சரணாகக் கொண்ட" (5.8:11) என்றும், ‘நம்பெருமான் அடிமேல் சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் (5-9:11) என்றும், நாகணைமிசை நம்பிரான் சரனே சரண் நமக்கு என்று நாடொறும், ஏக சிந்தனையனாய் (5. 10:11) என்றும் உபாயத்தன்மை பற்றிய சேதநன்மாட்டுள்ள வேண்டுதலையுட் கொண்ட துணிவு இதில் கூறப்பெற்றுள்ளது.