பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கூர்க் குடமாடும் கூத்தன் | 1 7 கடிது (10-1:8) என்றும், 'கெடும் இடராய (10-2:1), என்றும், ‘எழுமையும் ஏதம் சாரர் (10-2:2) என்றும், தரும் நோய்வினைகள் எல்லாம் (102:3) என்றும், இப்பிறப்பு அறுக்கும் (102:5) என்றும் 'உன்தன் திருவுள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் (10.3.9) என்றும், பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் (104:7) என்றும், பிறவித் துயர் கடிந்தோம் (1043) என்றும், விண்டே ஒழிந்த வினை ஆயின எல்லாம் (1049) என்றும், அமராவினைகளே (10.5:9) என்றும், ‘கடுநரகம் புகல் ஒழித்த (10-6:11) என்றும், பிறவி கெடுத்தேன்' (1083) என்றும், தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் (40.8.6) என்றும், 'அந்தி தொழும்', சொல்லு (108:7) என்றும், அவவாவற்று வீடு பெற்ற (10-10:11) என்றும் கூறப் பெற்றிருப்பதில் கைங்கர்யத்திற்குத் தடைகள யுள்ளவை அனைத்தும் அடியோடு அகன்றமை சொல்லப் பெற்றிருப்பதைக் காணலாம். இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் குமிழியிட்ட வண்ணம் அரிமேய விண்ணகரத்திற்கு வருகின்றோம். இந்தத் திருப்பதி திருமணி மாடக் கோயிலிலிருந்து சுமார் ஒரு பர் லாங் தொலைவிலுள்ளது. இத்திருத்தலத்து எம்பெருமானைத் திருமங்கையாழ்வார் ஒருவரே மங்களாசாசனம் செய்துள்ளார்." ஆழ்வார் பெற்ற அநுபவத்தையே நாமும் பெற முயல்கின்றோம். முதலில் நாங்கூர்ச் சூழ்நிலை அவரை எவ்வாறு கவர்ந்துள்ளது என்பதைக் காண்போம். தாழைகளும் தாமரைகளும் செங்கழுநீர்ப் பூக்களும் தடாகங்கள் தோறும் மலிந்து கண்டவிடமெங்கும் விளங்கப்பெற்றனவாய் ஆகாயத்தை அளாவிய சோலைகளையுடையது (1) எங்குப் பார்த்தாலும் புன்னை மரங்கள் காணப்பெறுகின்றன. இம்மரங்களிலுள்ள மொக்குகள் முத்துகள் போலவும், மலர்கள் பொன் போலவும் காட்சி அளிக்கின்றன. தேனைச் சொரியா நிற்கும் பலா மரங்கள் நிறைந்துள்ளன (2). மல்லிகை மலர்களும், செங்கழுநீர்ப் பூக்களும், திரள் திரளாகப் பூத்த மலர்களையுடைய சுரபுன்னைகளும், பாக்குப் பாளைகளும் செண்பக மலர்களும் மணம் வீசப்பெற்ற சோலைகள் ஊரைச் சூழ்ந்துள்ளன; இந்தச் சோலைகளின் நடுவே கரும்பு ஆடுகைக்காக ஏறின வயலில் கரும்பாலைகளின் புகை பரிமளிக்கப் பெற்றுள்ளது (4). எங்குப் பார்த்தாலும் வாத்திய ஒலிகளும், வண்டினங்களின் 3. அடியவர்களின் பாபங்களைப் போக்குவதனாலே ஹரி எனப்படுகின்ற எம்பெருமான் நித்தியவாசம் செய்யப்பெற்ற தலம் என்று பெயர் பெற்றது. 4. பெரி. திரு. 3.10