பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி பூதனையின் பாலை அவள் உயிரோடு அமுது செய்தவன்; அந்த நஞ்சுக்கு மாற்றாகத் தயிர் வெண்ணெய் முதலியவற்றை வாரி உண்டவன், கம்சனுடைய உயிர் குடித்தவன். உலகம் உண்ட பெரு வாயன் (9). வலிமிக்க ஏழுகாளைகளின் வலியடக்கி பின்னைப் பிராட்டியின் செவ்விய தோளைப் புணர்ந்துகந்த பெருமான் (10). இத்தகைய பெருமை வாய்ந்த பெருமான்தான் அரிமேய விண்ணகரத்தில் எழுந்தருளியிருப்பவன். ஆழ்வார் பெற்ற இந்த அநுபவத்தை நாமும் பெற்று திருக்கோயிலினுள் நுழைந்து கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் குடமாடு கூத்தனை வணங்குகின்றோம். தாயாரின் திருநாமம் அமிர்தகடவல்லி என்பது. இவரையும் வணங்கி இவருடைய திருவருளுக்குப் பாத்திரர்களாகின்றோம். திருமங்கையாழ்வார் கூறுகிறபடி அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே என்று ஒரு தடவைக்கு ஒன்பது தடவையாக நெஞ்சிற்கு உபதேசம் செய்கின்றோம். எம்பெருமான் சந்நிதியில் பத்துப் பாசுரங்களையும் ஓதி உளங் கரைகின்றோம். இந்நிலையில் திவ்விய கவியின் திருப்பாடலும் நினைவிற்கு வர, அதனையும் ஒதுகின்றோம். வாழும் அடியார் மடநெஞ்சே நம்அளவோ தாழும் சடையோன் சதுமுகத்தோன் - பாழிக் கரிமேய விண்ணகரக் காவலோன் கண்டாய் அரிமேய விண்ணகரத் தார்க்கு.? (மடம் . அறியாமையையுடைய வாழும் . வாழ்கின்றவர்கள்; நம் அளவோ - நாம் மாத்திரம் தானோ, தாழும் . தொங்குகின்ற, சதுமுகம் - நான்கு முகம்; பாழி - பலம் பொருந்திய கரி - யானை ஐராவதம்); விண்ணகரம் . உம்பர் உலகம்; காவலோன் - இந்திரன்) என்பது பாடல். “நம்மைப் போன்ற சாமானிய மனிதர்கள்தாம் அரிமேய விண்ணகரத்தில் அமர்ந்தானுக்கு அடியவர் என்று கருதுகின்றனையா? யோகம் செய்யும் முறையை உணர்த்தியவனும் ஞானத்தைத் தரக் கூடியவனுமான சிவபிரானும் விடாது நான் மறைகளை ஓதி அவற்றின் பொருளை உணர்பவனான நான்முகனும், உம்பர் நாயகனான இந்திரனும் இவனுக்கு அடியவர்களாவர். இப்படி எல்லார்க்கும் அவனே தலைவனாதலால், வேறு தெய்வங்களிடத்தில் சிறிதும் பற்று வைக்காமல் இவனையே நம்பியிருப்பின் நமக்குத் தவறாமல் நற்கதி கிடைக்கும்” என்று தம் நெஞ்சிற்கு அறிவுறுத்துகின்றார். இப்பாடலை ஒதும் நாமும் இதனையே நம் நெஞ்சிற்கு அறிவுறுத்துகின்றோம். பரிபூரண பிரம்மாநுபவம் பெற்ற நிலையில் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம். 7. நூற். திருப். அந். 32