பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி திருக்கோயிலில் உப்புமா, தேங்காய்த் திருகல் இவை பிரசாதங்களாகக் கிடைக்கின்றன. திருக்கோயிலுக்குப் பின்புறத்தில் நரசிம்மர் சந்நிதி ஒன்று உள்ளது. அங்குச் சென்று அவரையும் சேவித்து அவர்தம் திருவருளுக்குப் பாத்திரர்களாகின்றோம். திருக்கோயிலுடன் தொடர்புடைய வைணவர் ஒருவர் திருநாங்கூர் தலங்கள் சிலவற்றை ஒருசேரச் சென்று சேவிப்பதற்கு மாட்டு வண்டி அமர்த்தித் தருகின்றார். உணவு விடுதிகள் இல்லாத ஊரில் திருவமுதும் படைக்கின்றார். உணவுக்குப் பிறகு திருவாலியை நோக்கி வருகின்றோம். இந்தத் தலத்து எம்பெருமானைத் திருமங்கையாழ்வாரும் குலசேகராழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். குலசேகராழ்வார் கணபுரத்துக் கருமணியை தாலாட்டுப் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யும் பொழுது ஒரு பாசுரத்தில், ஆலிநகர்க்கு அதிபதியே’ என்று குறிப்பிடுகின்றார். திருமங்கையாழ்வார் தானான தன்மையில் ஒரு திருமொழியிலும் பிராட்டி நிலையை ஏறிட்டுக் கொண்டு இரண்டு திருமொழிகளிலும்" வயலாளி மணவாளனைச் சேவித்து மகிழ்கின்றார். இவற்றைத் தவிர, பெரிய திருமொழியில் ஒன்பது திருப்பாசுரங்களிலும்" திருநெடுந்தாண்டகம் (12) சிறிய திருமடல் பெரிய திருமடலிலும் இந்த எம்பெருமானைக் குறிப்பிடுகின்றார். இந்த வயலாளி மணவாளன்தான் தன்னை வழிப்பறிக்குமாறு அந்தண வடிவுகொண்டு பல ஆபரணங்களைத் தரித்து மணவாளக் கோலமாய் மனைவியுடனே எழுந்தருளின தாகவும், ஆழ்வார் இவர்களைத் திருமணங் கொல்லையில் திருவரச மரத்தடியில் பதுங்கியிருந்து அவர்களை வளைத்து வழிப்பறி செய்ததாகவும் பின்னர் எம்பெருமான் சகலவேத சாரமான எட்டெழுத்து மந்திரத்தை இவர் செவியில் உபதேசித்துக் கருடன்மேல் எழுந்தருளி இவருக்குச் சேவை சாதித்தாகவும் வரலாறு. வண்டியில் வந்து கொண்டிருக்கும்போதே ஊர்ச் சூழ்நிலை நம் கண்வட்டத்தில் படுகின்றது. சோழவளநாடு அல்லவா? “புல்லி வண்டறையும் பொழில் புடை சூழ் தென்ஆலி (3.5:10)என்று சோலை வளத்தைப் பேசுகின்றார் ஆழ்வார். அசோக மரத்தின் இளந்தளிர்கள் 8. பெரு. திரு. 8.7 9. பெரி.திரு. 3.5 10. மேலது. 3.6, 3.7 11. மேலது. 2.41, 4.9:2, 6.8:2, 8.9:6.8, 10.1:3, 11.3:9, 11.7:3, 11.86