பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலாளி மணவாளன் 129 இன்னொரு பாசுரததிலும், தேன்வாய வரிவண்டே திருவாலி நகராளும் ஆன்ஆயற் கென்னுறுநோய் அறியச்சென் றுரையாயே.’ (தேன்வாய - தேன்போல் இனிய வாய்ப்பேச்சு வரி . ரேகை) என்று வண்டை நோக்கிப் பேசுகின்றாள் பரகாலநாயகி, ‘தேன்வாய வரிவண்டே ஆபத்துக் காலத்தில் மதுரமான பேச்சுப் பேசுபவனன்றோ நீ? பிராட்டி அசோகவனத்தில் அசோக மரத்தில் மயிர் முடியைப் பிணைத்து உயிர் மாய்க்கப் புகுந்தபோது ஒருவன் இனிமையாகப் பேச்சுப் பேசி உயிர் பெறச் செய்ததுபோல உதவுபவனன்றோ நீ? என்று புகழ்ந்து கூறுகின்றாள். திருவாலி நகராளும் ஆனாயற்கு! இதற்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம்: "திருவாய்பாடியின் சம்பத்தோடே திருவாலியின் சம்பத்தையும் கையடைப்பாக்கினால், பின்னை அவனுக்கு, நொந்தாரை ஐயோவென்ன அவசரமுண்டோ?” என்று. அர்ச்சாவதாரத்தின் ஐசுவரியமும், விபவாவதாரத்தின் ஐகவரியமும் ஒரு மடை கொண்டிருக்கும் என்பது தோன்ற மூலம் இருக்கும் அழகை அறிந்து இன்சுவை மிக்க வியாக்கியானம் இட்ட அழகை அநுபவித்து மகிழவேண்டியது. அடுத்து நாரையைத் தூது விடுகின்றாள் ஆழ்வார் நாயகி. குருகை நோக்கி, "குறிப்பறிந்து கூறாயே' என்கின்றாள். “அவனுடைய திருவுள்ளத்தை அறிந்து வந்து என்னிடம் சொல்க” என்ற பொருள் தவிர, வேறொரு பொருளும் சொல்லலாம். அதாவது “நான் உனக்குத் தூது சொல்லும் வார்த்தையை அவனிடம் சென்று திடீரென்று சொல்லிவிடாதே; எந்தச் சமயத்தில் சொன்னால் பலிக்குமோ அந்தச் சமயத்தில் சொல்ல வேண்டுமாதலால் அந்தக் குறிப்புத் தெரிந்துகொண்டு என் வார்த்தையை அவனிடம் சொல்க” என்பதாகும். "நான் ஆற்றாமையாலே கண்ணாஞ் சுழலையிட்டுச் சொன்னவற்றையெல்லாம் அங்குச் சொல்லாதே. அவன் தரிக்கும்படி அளவறிந்து வார்த்தை சொல் என்றுமாம்” என்ற பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானப் பகுதியின் சுவை அநுபவித்து மகிழத்தக்கது. இத்திருமொழியில் இந்த நான்கு பாசுரங்களே தூதுரைப்பன; அடுத்த பாசுரங்கள் யாவும் எம்பெருமானை நோக்கி தன் ஆற்றாமையைத் தானே சொல்லிக் கதறுவனவாக அமைந்துள்ளன. ஒரு பாசுரத்தில், 23. பெரி. திரு. 3.6:4 24. பெரி. திரு. 3.6:3