பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. திருத்தேவனார்தொகை தெய்வநாயகன் வைணவ கொள்கைப்படி சித்து எனப்பெறும் ஆன்மாவும், அசித்து எனப்பெறும் மக்கள் விலங்கு முதலியவற்றின் உடம்பு முதலிய உலகப் பொருள்கள் எல்லாவற்றிற்கும் காரணமான பிரகிருதியும் (மூலப் பகுதியும்) இறைவனது உடலாக உள்ளன. இதனைச் சரீர - சரீரி பாவனை (உடல் - உயிர் - உறவு) என்று குறிப்பிடுவர் மெய்விளக்க நூலார். அதாவது பிரம்மம் எனப்படுவது உயிராகவும், இந்த அகிலம் உடலாகவும் உள்ளன. இராமாநுசர் இந்த உயிர் அகிலமாகிய உடலைத் தாங்கி அதற்கு ஆதாரப் பொருளாகவும், அதனைத் தன்னாட்சிக்கு உட்படுத்தும் பொருளாகவும் (நியந்தா) அந்தப் பொருளைப் பயன்படுத்தும் தலைவனாகவும் (சேவி) உள்ளது என்பர். இதன் காரணமாகத்தான் உடல் தாங்கப்பெறும் பொருளாகவும் (ஆதேயம்), தன்னாட்சிக்குட்பட்ட பொருளாகவும் (நியந்தா), தலைவனுக்காகவே நிலைபெற்றிருக்கும் பொருளாகவும் (சேஷன்) கொள்ளப் பெறுகின்றது. இதனால் இந்த உடல் உயிரின்றும் பிரிந்தியங்க முடியாத பொருளாக (பிரகாரா) அமைந்து கிடக்கின்றது. உயிருள்ள ஆன்மாவிற்கு முற்றிலும் ஆக்கப்பட்டதாகவும், தன் பயனுக்கு உட்பட்டதாகவும், முழுமை நிலையில் சார்ந்தன்மையுடையதாகவும் இருக்கும் எந்த ஒரு பொருளும் அந்த ஆன்மாவின் உடல் என்று வழங்கப்பெறும். ஆகவே, உயிருள்ள பொருள்களனைத்தும், உயிரற்ற பொருள்களனைத்தும் ஒருசேர பரமான்வின் உடலாக உள்ளது; காரணம், அவை பரமான்மாவால்தான் உயிர் பெறுகின்றன, இயங்குகின்றன, அப்பரமான்விற்கு மனநிறைவைத் தருவதற்காகவே நிலை பெற்றுள்ளன. மூலப் பகுதி விரிவடைந்து மக்கள், விலங்கு முதலியவற்றின் உடம்புகளாகவும், மற்றுமுள்ள பொருள்களாகவும் ஆகின்றது. உயிர், தன்னுடைய வினைகட்கேற்ப ஒவ்வொருடம்பை அடைகின்றது. அதுவே உயிருக்குப் பிறப்பாகும். இறைவன்