பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி இந்தத் திருத்தலம் சீகாழி இருப்பூர்தி நிலையத்திலிருந்து தென்கிழக்குத் திசையில் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நாம் திருநகரியிலிருந்து ஒரு மாட்டு வண்டியை அமர்த்திக்கொண்டு இத்திருக்கோயிலுக்கு வருகின்றோம். இது "கீழைச்சாலை மாதவப் பெருமாள் கோயில் என்று பொதுமக்களால் வழங்கப்பெறுகின்றது. இத்திருக்கோயில் மண்ணியாற்றின் தென்கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இதனைத் திருமங்கையாழ்வாரும், “போது அலர்ந்த பொழில் சோலைப் புறம்எங்கும் பொருதிரைகள் தாது உதிர வந்து அலைக்கும் தடமண்ணித் தென்கரைமேல் மாதவன்தான் உறையும் இடம்” (போது - பூக்கள்; அலர்ந்த - மலரப் பெற்ற தாது - மகரந்தப் பொடி, தடம் - பெரிய மாதவன் - திருமகள் நாதன்) என்று தம் பாசுரத்தில் குறிப்பிடுவர். இத்திருக்கோயில் மேற்கு நோக்கி அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாகும் நுழைவாயிலில் இராசகோபுரம் இல்லை. இப்பகுதியிலுள்ள பெரும்பான்மையான திருக்கோயில்கட்கு இராசகோபுரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், விமானம் இரண்டு தளமாக அமைந்து மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் இத்திருக்கோயிலுக்கு அழகூட்டுகின்றது. கருவறைக்கு முன்னர் விசாலமான மண்டபம் ஒன்று உள்ளது. இதனைக் கடந்துதான் கருவறைக்குச் செல்ல வேண்டும். எம்பெருமான் திருமணம் புரிந்துகொண்டு பின்னானர் வணங்கும் சோதியாக நின்றருளும் இத்தலத்தில் திருமண மாகாதவர்கள் வந்து வழிபாடு செய்தால் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு பெறுவர் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே இருந்து வருகின்றது. இதேபோல் மகப்பேறு இல்லாதவர்களும் இங்கு வழிபட்டு மக்கட்செல்வம் பெற்று மகிழ்கின்றனர் என்ற நம்பிக்கையும் உள்ளது. திருக்கோயிலுக்குப் பின்புறத்தில் இவர்ச் சுடுகாடு உள்ளது. இத்திருக்கோயிலின் விமானத்தின் நிழல் விழுகின்றது என்றும், இது இத்தலத்தின் மற்றொரு தனிச் சிறப்பு என்றும் கூறுவர். இதனை அறிந்த நாம், “சரணமாகும் தனதாள்.அடைந் தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்” 2. பெரி. திரு. 4.11 3. திருவாய். 9.10:5