பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தேவனார்த் தொகை தெய்வநாயகன் #39 என்ற திருவாய்மொழியை நினைவு கூர்கின்றோம். எம்பெருமானைச் சரணம் அடைந்தவர்கள் யாவரும் இவ்வுடல் முடியும்வரை (பிராரத்த கருமம் தீரும் வரை) பொறுத்திருக்க வேண்டும் என்பதனையும், அதன்பிறகு சஞ்சித கருமங்களைத் தீயினில் தூசாக்கி வீடு பேற்றினை நல்குவான் இறைவன் என்பதனையும் சிந்திக்கின்றோம். இத்திருக்கோயில் எழிலார்ந்த சோலைகள் சூழ்ந்த சூழ்நிலையில் அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இருப்பது அல்லவா? திருமங்கையாழ்வாரும் இதனைப் பொழில் திருத்தேவனார் தொகை" தேனாரும் மலர்பொழில் சூழ் திருத்தேவனார் தொகை சுந்தரநற் பொழில் புடைசூழ் திருத்தேவனார் தொகை" சேடேறு பொழில் தழுவு திருத்தேவனார் தொகை” சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத்தேவனார் தொகை' என்று குறிப்பிடுவர். திருக்கோயிலின் புறமெங்கும் பூக்கள் மலரப்பெற்ற சோலைகள் உள்ளன. அப்பூக்களின் தாது உதிரும்படியாக மண்ணியாற்றின் அலைகள் வீசுகின்றன. வண்டுகளும் தென்னாதென வென்று இசை பாடுகின்றன (1). இந்த மண்ணியாற்றங்கரையில் மிக்க பலசாலிகள் வசித்து வருகின்றனர் (4). இதனைத் திடகாத்திரமுள்ள உழவர்களைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். இவர்களைத் தவிர, திருநாங்கூரில் அக்காலத்தில் அந்தணர்களும் வாழ்ந்து வந்தனர் என்பதை 'பெருஞ்செல்வத்து எழில்மறையோர் நாங்கை தன்னுள் என்று இருமுறை (7, 8) குறிப்பிடுவதையும் காணலாம். இங்ங்னம் சிந்தித்த நிலையில் திருக்கோயிலின் முன் வாசலில் ஓய்வுகொண்ட பின்னர் எம்பெருமான் சந்நிதிக்குச் செல்லுகின்றோம். இத்திருக்கோயில் எம்பெருமானின் திருநாமம் தெய்வநாயகப் பெருமாள் என்பது உற்சவரின் திருநாமம் மாதவப் பெருமாள், தாயார், கடல்மகள் நாச்சியார். இவர் திருக்கோயிலின் தென்பகுதியில் தனிக்கோயிலில் எழுந்தருளித் திருவருள் பாலிக்கின்றார். இங்கு எம்பெருமானும், தாயாரும் சிறிய உருவத்தைக்கொண்டு திகழ்கின்றனர். மூலவர் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அர்ச்சகர் கற்பூர தீபம் காட்டும்பொழுது எம்பெருமானின் அழகிய திருமுக மண்டலமும் மந்தகாசமான தோற்றமும் நம்மைப் பரவசப் படுத்துகின்றன. உடனே திருமங்கையாழ்வாரின் பத்துப் பாசுரங்களையும் மிடற்றொலியால் ஓதி உளங் கரைகின்றோம். 4. பெரி. திரு. 4.1:2 7. மேலது. 4.1:7 5. மேலது. 4.1:3 8. மேலது. 4.1:8 6. மேலது. 4.1:4