பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv இலக்கியமாகத் திகழ்பவர். தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த இப்பெருமகனார் சென்னை மாநிலக் கலலூரியில் பயின்று பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டமும், சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று பி.எல். பட்டமும் பெற்றவர். கல்லூரி வாழ்வில் இரு கல்லூரிகளிலும் தமிழ்ச் சங்கச் செயலாளராக இருந்து அரும்பணியாற்றியவர். இதனால் இவர்தம் தமிழ்ப்பற்று நன்கு புலனாகும். 1952-60 ஆண்டுகளில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராகத் தம் திறமையைப் பல்லோரும் போற்றும் வகையில் பணியாற்றியவர். தமிழக அரசும் இவர்தம் திறமையை வியந்து ஒராண்டு காலம் (1967-68) பப்ளிக் புராசிகுயூட்டர் பதவியையும், தொடர்ந்து ஓராண்டு காலம் (1968-69) அட்வொகேட் ஜெனரல் பதவியையும் வழங்கியது. அடுத்து 1969 சூன் முதல் உயர்நீதி மன்றத்தின் நிலையான நீதிபதிப் பதவியும் இவரை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சிகள் இவர்தம் திறமைக்கும் நேர்மைக்கும் இத்துணைக்கும் மேலாக இவர்தம் உயர்பண்புக்கும் கிடைத்த பரிசுகளாக அமைகின்றன. இன்றுவரை நேரிய முறையில் நீதிபதியாக, சிறிது காலமாகத் தலைமை நீதிபதியாக சமன் செய்து சீர்தூக்கும்கோல் போல் அமைந்து சான்றாண்மை குன்றாது பணியாற்றி வருவதை தமிழகம் மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டமே நன்கு அறியும். மாணாக்கர் வாழ்விலேயே திருவிகவிடம் இவருக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் உண்டு. இதனால் அப்பெரியவரின் ஆசி அன்றும் இருந்தது. இன்றும் இருந்து வருகின்றது. என்றும் இருந்து வரும் எனக் கருதலாம். அப்பெருமகனாரின் பெயரில் தோற்றுவித்து நடைபெற்று வரும் மணவழகா மன்றத்தின் தலைவராகப் பணியாற்றித் தற்சமயம் புரவலராகப் (காப்பாளராக) பணியாற்றி வருபவர். இதனைத் தவிர, பல்லாண்டுகள் இயல் இசை நாடக மன்றத் தலைவராகவும், பல்லாண்டுகள் விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிடியூட்டின் (பழம் பொருள்கள் கிடைக்குமிடம்) தலைவராகவும் பணியாற்றி வருபவர். இதனால் இவர்தம் கலையார்வத்தை நன்கு அறிய முடிகின்றது. ஆயர்பாடிக் கண்ணனைப் போல் இவரும் பிள்ளைப் பிராயத்திலேயே துடுக்காக இருந்து வந்திருக்க வேண்டும். அக்கண்ணனிடம் இருந்த தலைமைப்பண்பு இவரிடமும் கருவிலே திருவாக அமைந்திருக்கவேண்டும். கண்ணனின் பெரும் புகழுக்குக் 3. மணம் - கர்யாணம், அழகர் - சுந்தரர்; மன்றம் - கழகம்