பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் திருவாய்மொழி அர்த்த பஞ்சக ஞானத்தை நல்குகின்றது என்று ஆசாரியர்கள் அருளிச் செய்துள்ளனர். அதனை ஈண்டுச் சிந்திக்கின்றோம். அர்த்த பஞ்சகம் என்பது இறைநிலை (பரஸ்வரூபம்), உயிர்நிலை (ஆன்ம ஸ்வரூபம்), நெறியியல் (உபாய ஸ்வரூபம்), தடையியல் (விரோதி ஸ்வரூபம்), வீட்டின் இயல் (புருஷார்த்த ஸ்வரூபம்) என்னும் ஐந்து பொருள்களைக் கூறுவது. இவற்றை அடைவே நோக்குவோம். “உயர்வற உயர்நலமுடையவன் (திருவாய் 1-1:1) என்ற திருவாய்மொழியில் அயர்வறும் அமரர்கள் அதிபதி என்பதனால் பெரும்பாலும் உபநிடதங்களின் அடியொற்றிப் பரத்துவத்தில் பரத்துவமும், திண்ணன் வீடு என்றதில் பெரும்பாலும் இதிகாச புராணங்களின் கூற்றாலே உடன்பாட்டாலும் எதிர்மறை முகத்தாலும் பிறருக்கு உபதேசம் செய்யும் முகத்தால் அவதாரத்தில் பரத்துவமும், “அணைவரு அரவணை (2-8:1) என்றதில் வீடு முதலாம்’ என்பதனாலும், புணைவன் பிறவிக் கடல் நீந்துவார்க்கே’ என்பதனாலும் பட்டர் நிர்வாகத்தின்படி மோட்சத்தின் தன்மையைக் கூறுகையால் பரத்துவமும், ஒன்றும் தேவும் (4.10:1) என்றதில் 'ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா, அன்று நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர்படைத்தான் என்று எம்பெருமானுடைய ஜகத் காரணத்துவத்தை முதலிப்பதால் பரத்துவம் கூறி இறைநிலை நிலைநிறுத்தப்பெறுகின்றது. ஆன்மஸ்வரூபத்தை (உயிரின் நிலையை) நோக்குவோம். 'பயிலும் சுடர் ஒளி (3.7:1) என்னும் திருவாய்மொழியில் பயிலும் பிறப்பிடைதோறும் எம்மை யாளும் பரமரே என்பதனால் மேன்மேலும் பிறப்பது எமக்கு விடத்தக்கதாக இருப்பினும் 1. ஆசா. ஹிரு. 211 (புருடோத்தம நாயுடு பதிப்பு)