பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV காரணமாக இருந்தவை அவனிடம் காணப் பெற்ற செளலப்ய செளசீலயாதி குணங்கள். அந்தக் குணங்கள் இவரிடமும் காணப்பெறுவதை இவரிடம் அன்றாடம் நெருங்கிப் பழகுபவர்கள் நன்கு அறிவார்கள். அந்தக் காலத்தில் நீதியை நிலைநாட்ட பாரதப் போர் நிகழ்ந்தது. அப்போரில் பார்த்தனுக்குச் சாரதியாக இருந்துகொண்டு நீதியை நிலைநாட்டினான் கண்ணன். பார்த்தசாரதி என்ற அழகான பெயருக்கு ஒர் உயர் கருத்தையும் நிலைநாட்டி அப்பெயரை நிலைத்து வாழச்செய்தான். அங்ங்னமே நாட்டின் நீதிதேவனின் தேரை நடத்தும் பொறுப்பு தெய்வ சங்கற்பமாக இவரிடம் வந்தமைந்துள்ளது; தம் பெயருக்குப் பொருத்தமாகப் பார்த்தசாரதியின் பொறுப்பும் வந்துள்ளமை ஒருவாறு ஒற்றுமை நயத்தைப் புலப்படுத்துகின்றது. இதனை அறிஞர்களும் அரசும் பாராட்டும் வண்ணம் நடத்தி வருவதை நாம் கண்டு மகிழ்கின்றோம்; பாராட்டவும் செய்கின்றோம். சோழ நாட்டைச் சார்ந்த ஒரு பெருமகனாரிடம் சோழ நாட்டுத் திருப்பதிகள் என்னும் என் நூல் அணிந்துரை பெறும் வாய்ப்புப் பெற்றது நூலுக்குப் பெருமையளிக்கின்றது. அணிந்துரை வழங்கிய அன்பருக்கு அடியேன் உளங்கனிந்த நன்றியைப் பெருமையுடன் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். காஞ்சி காமகோடிப் பீடம் 68வது பட்டம் தவத்திரு சந்திரசேகரேந்திர சரசுவதி பரமாச்சாரிய சுவாமிகளை அறியாதார் நமது பண்ணிய பூமியில் ஒருவரும் இருக்க முடியாது. கி.பி. 1907 முதல் இந்திர சரசுவதி என்னும் பட்டத்துடன் அணிசெய்து ஞானச் செங்கோலோச்சி வருபவர்கள். தவம் என்பதற்கு ஒர் உருவம் கொடுத்துப் பேச வேண்டுமாயின் அது 'காஞ்சிப் பெரியவாள் தாம் என்று சொல்லுவது எள்ளளவும் மிகையாகாது. இன்று நாட்டில் நடமாடும் தெய்வமாகக் காட்சியளிக்கும் சுவாமிகள் ஆதசங்கரரின் அவதாரமாக வைத்தெண்ணப் படுபவர்கள். நாடு முழுவதும் பாதயாத்திரை செய்து புண்ணிய பூமியை மேலும் புனிதமாக்கியவர்கள். அசோகவனத்திலிருந்த சீதாப்பிராட்டியைக் கம்பன் 'தவம் செய்த தவம்’ என்று காட்டுவான். சுமார் பதினைந்து ஆண்டுகட்கு முன்னர் அடியேனின் இரு மந்தர்கள் உட்பட துணைவியுடன் பெரியவாள் அவர்களைக் காஞ்சியில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் தரிசித்தபோது கண்ட தவம் செய்த தவமாம் போன்ற உருவம் இன்னும் அடியேனின் மனத்தை விட்டு அகலவிடவில்லை கள்ளங் கபடமற்ற குழந்தையின் முகத்தில் பால் வடியும் என்று