பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணிக்கூடத்து நாயகன் 151 நின்றிருந்தாலும் போதும் என்ற சாத்திரப் பொருள் தெரிவிக்கப் பெறுகின்றது. கைங்கரியத்தைப் பற்றி ரீவசன பூஷணம் குறிப்பிடுவதையும் சிந்திக்கின்றோம். கைங்கரியம் தன்னைப் பல சாதனம் ஆக்காதே பலமாக்கவேணும்." என்பது சூத்திரம். கைங்கரியம் புரியுங்கால், இம்மை மறுமை வீடு ஆகிய பலன்களில் யாதேனும் ஒன்றிற்கு அதனைச் சாதனமாக நினையாமல் கைங்கரியம் செய்வதையே ஒரு பயனாக நினைக்க வேண்டும் என்பது இதன் கருத்து. சாதனம் ஒரு பலனைப் பெறுதற்குக் கருவியாக இருப்பது பலமாக்குதல் - இறைவனுடைய முக உல்லாசம் ஒன்றையே கருதுதல். 'உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்று ஆண்டாள் கூறுவதும் இதுவேயாகும். இதனை அதாவது, தான் கை ஏலாதே அவனைக் கை ஏற்கப் பண்ணுகை என்று மேலும் விளக்குவர் பிள்ளை உலக ஆசிரியர். இந்தக் கைங்கரியத்தைச் சாதனம் ஆக்காது பலம் (பயன்) ஆக்கவேண்டும் என்பது இதன் பொருள். அதாவது, ங்ைகரியம் கொள்ளுகின்ற இறைவனை, தன் நிறைவினைப் பாராமல், விருப்பத்துடன் ஏற்கப் பண்ண வேண்டும். மேலும், கொடுத்துக் கொள்ளதே, கொண்டதற்குக் கைக் கூலிக்கொடுக்க வேணும்." என்பர் அவ்வாசிரியர். ஒன்றைக் கொடுத்து அதற்குப் பதிலாக ஒரு பயனையும் கொள்ளாமல், கொடுத்த பொருளை எம்பெருமான் ஏற்றுக் கொண்டமைக்காக அப்படிப்பட்ட பொருளை தன் ஆசைக்குத் தகுதியாக நிறையக்கொண்டு வந்து கொடுத்துப் பின்னையும் கைக்கூலி கொடுக்க வேண்டும். இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில்,நான் ஒன்று நூறா யிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும்செய்வன்" (ஆளும் - கைங்கரியமும்) என்று பெரியாழ்வார் திருமகள் சொல்லுவது இதுவேயாகும். இவ்வாறு ஒரு பயனையும் கருதாது கைங்கரியம் 5. யூரீவச. பூஷ. 287 7. பூரீவச. பூஷ. 288 6. திருப். 29 8. மேலது 289 9. நாக், திரு. 9:7