பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி புரிந்தவர்களில் எடுத்துக்காட்டுகளாக விதுரர், மாலாகாரர், கூனி என்ற மூவரைக் காட்டுவர் ஆசிரியர். பாரதத்தில் கண்ணன் தூது வந்தபோது விதுரர் கண்ணன் நெஞ்சு உகுக்கும்படி யாதொரு பயனையும் கருதாது, என்ன மாதவம் செய்தது இச்சிறுகுடில்?" என்று கூறி மாயோனுக்கு அமுது படைக்கின்றான். மாலாகாரர் என்பவர் கிருட்டிணனுக்கும் பலராமனுக்கும் அணிந்துகொள்ள மலர்மாலை கொடுத்தவர்; இவர்தான் இச்சிறுவர்களைக் கம்சன் அமைத்த வில்விழாவிற்கு அழைத்து வந்தவர். கூனி என்பவள் இ - தி - கி - கூனி - 沉 இந் - கூனி கி - Ꭷa - & பூசிக்கொள்வதற்குச் சாந்து கொடுத்தவள். இதனை, மடிதடவாத சோறும், சுறு நாறாத பூவும், சுண்ணாம்பு படாத சாந்துமிறே இவர்கள் கொடுத்தது." (சுறு - மலர், மயிர் முதலானவை நெருப்பில் பட்டுப் பொங்கும்போது உண்டாகின்ற தொரு நாற்ற விசேடம்.) என்று எடுத்துக்காட்டுவர் ரீ வசன பூஷண ஆசிரியர். திருத்தேவனார்த் தொகையிலிருந்து திருமணிக் கூடத்தை நோக்கி மாட்டுவண்டியில் வந்து கொண்டிருக்கும் நம் மனத்தில் மேற்கூறிய கருத்துகள் குமிழியிடுகின்றன. திருமணிக் கூடம் என்ற திவ்விய தேசம் சீகாழி இருப்பூர்தி நிலையத்திலிருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. நிலையத்திலிருந்து வண்டியில் வருவதைவிட நாம் மேற்கொண்ட முறையே சிறந்தது. இந்த ஏற்பாட்டில் திருத்தேவனார்த்தொகை (திருநாங்கூர்த் திருப்பதிகளில் 4 வது), திருமணிக் கூடம் (8 வது), காவளம்பாடி (9 வது), பார்த்தன் பள்ளி (1 வது) என்ற நான்கு திவ்விய தேசங்களையும் சேவித்து விடுகின்றோம். இத்திருத்தலம் மண்சாலைக்கருகில் ஒரு புளியந்தோப்பினுள் உள்ளது. வண்டி திருக்கோயிலை நெருங்கி வந்து கொண்டிருக்கும்போது திருக்கோயில் அமைந்திருக்கும் சூழ்நிலையை நம் கண்கள் வட்டமிடுகின்றன. ஓரளவு திருமங்கையாழ்வார் காலத்தில் இருந்த சூழ்நிலை இன்றும் உள்ளதா என்று கவனிக்கின்றோம். திருமங்கையாழ்வார் திருக்கோயிலின் சூழ்நிலையை, 10. வில்லிபாரதம் - கிருட்டிணன் துரத - 78 12. மேலது 291 11. ரீவச. பூஷ. 290 13. பெரி. திரு. 4.5:1