பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. காவளம்பாடிக் கண்ணன் “மாதவன்என்றென்று ஒதவல்லிரேல் தீதொன்றும் அடையா ஏதஞ்சாராவே" (மாதவன் - இலக்கமி நாதன், தீது . முன்னைய பாவங்கள் ஏதம் . மேலுள்ள பாவங்கள்) காவளம்பாடியை நோக்கி நம் மாட்டுவண்டி வந்து கொண்டிருக்கும்பொழுதே இந்தத் திருவாய்மொழிப் பாசுரம் நம் மனத்தே எழுகின்றது. வாடாமலர் கொண்டு நாள்தோறும் நாட முடியாமலும், வேங்கடம் மேயானை அடிபணிய முடியாமலும் இருப்பவர்கட்கு ஒருவழி அருளிச் செய்கின்றார் ஆழ்வார் இப்பாசுரத்தில். இதில் ‘மாதவன் என்று சொல்லாமல் மாதவன் என்று இரட்டித்துச் சொன்னதன் காரணத்தைச் சிந்திக்கின்றோம். இலக்குமி சம்பந்தத்தை இரண்டு தடவை அநுசந்திக்க வேண்டும் என்பது குறிப்பு. இரண்டு கண்டமாக உள்ள துவயம் என்னும் மந்திர இரத்தினத்தில் முன் வாக்கியத்திலும் பின்வாக்கியத்திலும் உள்ள ‘ரீமத் என்ற பதங்களின் பொருள்களைத் திருவுள்ளம்பற்றி துவய அநுசந்தானம் செய்ய நியமிக்கின்றார் ஆழ்வார் என்று கொள்ள வேண்டும். ஆசாரிய ஹிருதயத்திலும் மாதவன் என்று துவயமாக்கி என்று அருளிச் செய்திருப்பதும் ஈண்டு சிந்திக்கத்தக்கது. ரீமத்' என்ற இரண்டு பதங்களின் கருத்தை நம் ஆசிரியர்கள் தெளிவாக்கியுள்ளனர். "இதில் முற்கூற்றால் பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈசுவரன் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறது; பிற்கூற்றால் அச்சேர்த்தியிலே அடிமை இரக்கிறது” 1. திருவாய். 10.5:7 2. ஆசாரிய ஹிரு. சூத்திரம் 228 3. முமுட்கப்படி - 122