பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பார்த்தன்பள்ளிச் செங்கண்மால் ஒத்தின் பொருள்முடிவும் இத்தனையே உத்தமன்பேர் ஏத்தும் திறம்; அறிமின்... .. மாதவன்பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு" (ஒத்து - திருமுறை; ஏத்தும் - துதிக்கும் திறம் - வகை; சுருக்கு - சாரம்) “எம்பெருமான் திருநாமங்களை உச்சரிப்பதே திருமுறைகளின் சாரமாகும்; ஆகவே அவனைத் துதிக்கும் வகையை அறிந்து கொள்ளுங்கள்” என்பது பூதத்தாழ்வார் காட்டும் வழி. ஞானம் மீதுர்ந்து நிகழும்பொழுது இங்ங்னம் அவன் திருநாமங்களைச் சொல்லி அநுபவிக்கலாம்; அவனுடைய திருக்குணங்களில் ஈடுபட்டு அநுபவிக்கலாம்; அவனுடைய திவ்விய மங்கள வடிவழகை வருணித்து அநுபவிக்கலாம்; அவன் உகந்த திவ்விய தேசங்களின் வளங்களைப் பேசி அநுபவிக்கலாம்; அவ்விடங்களில் ஆதரம் மிக்க அடியார்களின் பெருமைகளைப் பகர்ந்து அநுபவிக்கலாம். இவற்றைத் தவிர சிறப்பான தனித்தன்மையுடைய ஒரு வழியும் உண்டு. அதாவது தாமான தன்மையை விட்டுப் பிராட்டிமாரின் தன்மையை ஏறிட்டுக் கொண்டு வேற்றுவாயாலே பேசியநுபவித்தலாகும் இது. இந்நிலையை ஆசாரிய ஹிருதயம் என்னும் நூல், ஞானத்தில் தம்பேச்சு பிரேமத்தில் பெண்பேச்சு’ (பிரேமம் - காதல், அன்பு) என்று குறிப்பிடும். திருமங்கையாழ்வார் இந்நிலையில் இருந்து கொண்டு எம்பெருமானைப் பாடிப்பெற்ற அநுபவம் சொல்லுந்தர மன்று. அப்பாசுரங்களை ஓதியே நாம் அநுபவிக்க வேண்டும். 1. இரண். திரு. 39 2. ஆசாரிய ஹிரு. சூத்திரம் 118