பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி திருமேனின் நிறம் குவளை மலர், காளமேகம் இவற்றின் நிறத்தையொத்துக் கண்ணைக் கவரும் திறத்தது. யானையை எத்தனை தடவை பார்த்தாலும் ஒவ்வொரு தடவையும் கிடைத்தற்கரிய பொருள்போல் காணப்பெறுவது போலவே, தன் கண்ணனும் அப்பொழுதைக்குப் பொழுது ஆராவமுதமாக இருக்கின்றான்” என்கின்றாள் (1). யானையை முடித்த செய்தி ஒரு தடவை சொல்லி முடியக் கூடியதோ? மிகவும் வேகமாகச் சீறி வந்த களிற்றுடன் போர்புரிவதும் வெற்றி பெறுவதும் எளிதான செயலல்லவே' என்று அந்த வீரத்திலேயே ஈடுபட்டுக் கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறு அடர்த்தகாளை என்கின்றாள். சிறிது வயது சென்ற பிறகு செய்த இச்செயல் கிடக்கட்டும். தொட்டில் பருவத்தில் செய்த அரும்பெருஞ் செயல் உங்கட்குத் தெரியுமோ? வஞ்சனையாகக் கொல்ல வந்த பேய்ச்சியின் முலையுண்கின்ற போக்கில் அவள் உயிரையும் உண்ட மாயன் அன்றோ இவன்? என்கின்றாள் (2). "இவள் நான்முகன் படைத்த அண்டங்களிலுள்ளார் எல்லோர்க்கும் சுவாமி, தனக்கு ஆனை போன்றவன், இடைப் பெண்களின் கொங்கைகளுடன் அணையும் இயல்புடையவன்; திருமறைகளும் தேடிச்செல்லும் செல்வன்' என்கின்றாள் (3). இதனை ஊடல் தோன்றச் சொல்லுகின்றாள் என்று கொள்ள வேண்டும். "நேற்றுவரை அடங்கிக் கிடந்த இவள் அழகிய வளையல்களணிந்த மகளிர் முன்னே வரம்பு அழிந்தவளானாள்; பெண்மைக்குரிய மரியாதைகள் அழியப் பெற்றாள்; பல மகளிரின் எதிரே சேது கட்டுவித்து இலங்கையைப் பாழ்படுத்திய பெருமிடுக்கன் என்று தலைவனைப் புகழ்கின்றாள் (4). ஒரு பிராட்டிக்காகப் படாதபட்டு அரும்பெரும் செயல்கள் ஆற்றியவன் தன் விஷயத்திலும் கொள்ளவேண்டும், அலட்சியமாக இருப்பதாகச் சொல்லுகின்றாள் என்று. “முன்பு ஒரு காலத்தில் அரக்கர்களின் ஆவி முடியும்படியாக ஆழ்கடல் சூழ் இலங்கையைப் பொடிபடுத்திய பெருவீரன்; ஆண்மைக்கு இலக்கணமான அழகிய வில்லைக் கையிலே உடையன்” என்கின்றாள் (5). “பிரளய காலத்தில் உலக முழுவதையும் தன் திருவயிற்றில் காத்துப் பின்னர் வெளிப்படுத்திய பெருமான், கடல் போன்ற திருமேனி நிறமுடையவன்' என்கின்றாள் (6), “எத்தனையோ பிறவிகளாகத் தேடிப் பிடித்து என் நெஞ்சைத் தன் இருப்பிடமாகக் கொண்ட நாதன்; அவனோ யார்க்கும் அகப்படாத கள்வன்; நான்கு மறைகளும் தேடிப்பார்த்தாலும் அவற்றுக்கும் அகப்படாத தொலைவிலுள்ள பெருமையுடை யவன்'