பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்தன்பள்ளிச் செங்கண்மால் 165 என்கின்றாள் (7). “உயர்ந்தோராலும் சாதாரண மக்களாலும் புகழப் பெறுபவன். சந்திர சூரியர்களாலும் மற்றுமுள்ள உம்பராலும் கிட்ட முடியாமல் பெருஞ்சுடர் வீட்டிலங்கும் திருவாழியாழ்வானை ஆயுதமாகவுடையவன்; அடியார் பக்கல் பேரன்புடையவன்” என்கின்றாள் (8). “கண்ணன் என்றும், வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும் எண்ணன் என்றும், எல்லோர்க்கும் இன்பம் அளிப்பவன் என்றும், ஏழ் உலகங்கட்கும் காரணபூதன் என்றும் பேசுகின்றாள் என் மகள்” (9). இத்தகைய பெருமான் பார்த்தன் பள்ளியில் திருக்கோயில் கொண்டுள்ளான் என்று சொல்லிவிட்டு அத்திருப்பதியின் திருநாமமிட்டு இசைபாடத் தொடங்கிவிட்டாள் தன் மகள் என்று திருத்தாயர் ஒரு தடவைக்கு ஒன்பது தடவையாகப் “பார்த்தன் பள்ளி பாடுவாளே” என்று கூறுகின்றாள். இங்ங்னம் திருப்பாசுரங்களில் ஆழங்கால்பட்ட வண்ணம் திருக்கோயிலுக்குள் நுழைகின்றோம். நின்ற திருக்கோலத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலம்கொண்டு சேவை சாதிக்கும் தாமரையாள் கேள்வனைக் கண்டு மகிழ்ந்து வழிபடுகின்றோம். தாயாரின் திருநாமம் தாமரை நாயகி என்பது. இவரையும் வணங்கி இவருடைய திருவருளுக்குப் பாத்திரர்களாகின்றோம். எம்பெருமான் சந்நிதியில் திருமொழிப் பாசுரங்கள் பத்தையும் மிடற்றொலி கொண்டு ஓதி உளங்கரைகின்றோம். ஆழ்வார் கொண்ட பிராட்டியின் நிலை நமக்கு வருவதற்கு முயல்கின்றோம். இப்பாசுரங்களை ஒதுபவர்கள் “ஏர்கொள் நல்ல வைகுந்தத்துள் நாளும் இன்பம் எய்துவார் (10) என்ற குறிப்பை நினைந்து எம்பெருமானை ஒரு நொடிப்பொழுதும் பிரியாமல் அநுபவிக்கும் இடமாகிய திருநாட்டில் நித்தியானந்தம் அநுபவிக்கப் பெறுவோம்” என்ற எண்ணமும் கொள்ளுகின்றோம். இந்நிலையில் திவ்விய கவியின் திருப்பாடல் நினைவிற்கு வர, அதனையும் ஒதுகின்றோம். ஒத்துஅமரர் ஏத்தும் ஒளிவிசும்பும் பாற்கடலும் இத்தலத்தில் காண்பரிய என்நெஞ்சே - சித்துணர்ந்த தீர்த்தன்பள் வளிக்கிருந்து செப்பவெளி நின்றானைப் பார்த்தன்பள் வளிக்குட் பணி” (ஒத்து - ஒன்றுகூடி, அமரர் - நித்திய சூரிகள்; ஒளிவிசும்பு - பரமபதம்; இத்தலத்தில் . இந்தப் பூமியில்; சித்து - சீவான்மாவின் உண்மை நிலை; தீர்த்தன் - பரிசுத்தனான பிரகலாதாழ்வான்; செப்ப - மறுமொழி கூற வெளிநின்றானை - துணிநின்று) வெளித்தோன்றிய திருமாலை, பணி வணங்குக) பெரி. திரு. 4.8:1 பாசுரம் காண்க. 7. நூற். திருப். அத். 40 6