பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 6 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி இனி, திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பற்றிய ஆழ்வாரின் அநுபவத்தில் ஆழங்கால் படுவோம். இந்த எம்பெருமான் உலகளந்த பெருமாளாதலால் ஒரு குறளா என்று தொடங்கி வாமன திரிவிக்கிரகமாவதாரத்தை அநுசந்திக்கின்றார். “ஒருகுறளா இருநில மூவடிமண் வேண்டி உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாளணைவீர்" இருநிலம் - விசாலமான நிலம்; ஒடுக்கி ஆக்கிரமித்து, ஒன்றும் . மூன்றாவது அடி நிலத்தையும், தாடாளன் - பெருமை பொருந்தியவன், முயற்சியுள்ளவன்; தாள் - திருவடி) இத்திருத்தலம் தாடாளன் சந்நிதி என வழங்குதலும் உண்டு. தனக்கு ஆயுள் மிகுதியுள்ளது என்று அகங்காரம் கொண்டிருந்த நான்முகனின் செருக்கை உரோமசன்மரைக் கொண்டு அடக்கியவன், சிவனின் சாவத்தைத் தீர்த்தவன். (2) உரோமசன்மரின் வரலாறு இதிகாச புராணங்களில் எங்கும் காணப்பெற்றிருப்பது. பலர் மூலம் பல வாறாகக் கேட்ட கதையைச் சுருக்கிக் கூறுவர். பிரதிவாதி பயங்கரம் அண்ணவகராசாரிய சுவாமிகள். உரோமசன்மர் உடல் முழுவதும் கரடிபோல் அடர்ந்த மயிர்களையுடைய ஒரு மாமுனிவர். இவர் நீண்ட காலம் வாழ்ந்து எம்பெருமானைச் சிந்தனை செய்ய விரும்பினார். ஒரு புண்ணிய நதிக்கரையில் தவம் செய்தார். பரந்தாமன் இவர் முன் சேவை சாதித்து இவர் விருப்பத்தைக் கேட்க, முனிவர் இந்த உடம்புடன் எம்பெருமானைத் தொழுது விரும்புவதால் பல்லாயிரம் நான்முகனுக்குரிய ஆயுளைத் தந்தருள வேண்டினார். பரந்தாமனும் திருவுள்ளம் உவந்து, ‘மாமுனிவரே, நான்முகனுடைய ஆயுளை நீர் அறிவீர். ஒரு நான்முகன் காலம் சென்றால், உம்முடைய உடம்பினின்றும் ஒரு மயிர் இற்று விழக் கடவது. இப்படி ஒவ்வொரு நான்முகனின் முடிவிலும் ஒவ்வொரு மயிராக இற்று இனி உம்முடைய உடம்பில் ஒரு மயிரும் இல்லை என்று சொல்லத்தக்க நிலைமை நேரும் அளவும் நீர் வாழ்ந்திருக்கக் கடவீர்” என்று வரம் அருளினர் என்பது வரலாறு. அடுத்து, கோலவராகாவதாரம் எடுத்து பூமிப் பிராட்டியாரை அண்டபித்தியினின்றும் விடுவித்துத் தம் கோட்டு நுனியில் வைத்தருளிய கோமான். வாணனுடைய ஆயிரம் தோள்களைத் தம் கூராழியினால் அறுத்தெறித்தவன் (3). வலிமிக்க ஏழு காளைகளை அடக்கிப் பின்னை பிராட்டியை மணந்த பெருமான். இரணியனின் 11. பெரி. திரு. 3.41