பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி அடியார்களின் விரோதிகளைப் போக்குதற்கு இப்படைகள் பயன்படுகின்றன. இவ்வாயுதங்களைத் தாங்கும் வன்மை மட்டிலும் போதியதன்று. விரோதிகளையும், அவற்றைப் போக்கும் முறைகளையும் அறிபவனாய் இருத்தல் வேண்டும். இங்ங்னம் இச்செய்தியை உற்று நோக்குங்கால், தன்னைப் பற்றிய சேதநனுடைய காரியத்தைச் செய்யும்போது பயன்படுவையான ஞான சக்திகளுக்குப் பிரகாசங்கள் திவ்விய ஆயுதங்களாகும் என்பதனை அறிகின்றோம். சேதநர், தாம் செய்த குற்றங்களை நினைந்து "ஐயகோ இத்தனைப் பிழைகளை இழைத்த நாம் எங்ங்னம் அத்துணை உயரிய சுவாமியைச் சென்றடைவது? என அஞ்சி அகலாதிருக்கும் பொருட்டே, அவருடைய திருக்கை அபய முத்திரையுடன் சேவை அளிக்கின்றது. இஃது “உங்கள் குற்றங்களை நினைத்து நீங்கள் அஞ்ச வேண்டா. என்னை வந்தடையுங்கள். யான் உங்களை ஏற்றுக்கொள்வேன்” என்னும் அன்பைக் காட்டும் வாத்சலயத்தின் அறிகுறியாகும். எம்பெருமான் தலையில் கவித்திருக்கும் இரத்தின முடி அவன் எல்லா உலகங்கட்கும் சுவாமியாயிருத்தலை அறிவிப்பதாகும். அன்பர்களைக் காணுங்கால் எம்பெருமானுக்கு உண்டாகும் முகமலர்ச்சியும் புன்முறுவலும் அவர்களோடு புரையறக் கலக்கும் சீலத்தைத் தெரிவிக்கும். ஆசனபதுமத்தில அழுந்தி நிற்கும் எம்பெருமானின் இரண்டு திருவடிகளும் அனைவரும் பற்றுதற்கு இடந்தந்து நிற்கின்றன. இத்தன்மை செளலப்பியத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த எண்ணங்கள் நம் சிந்தனையில் குமிழியிட்ட வண்ணம் திருஇந்தளூர் என்ற திருத்தலத்திற்குப் பயணமாகின்றோம் காளியாக்குடி அய்யர் விடுதியிலிருந்து. மயிலாடுதுறை இருப்பூர்தி நிலையத்திலிருந்து வடகிழக்கில் மூன்று மைல் தொலைவில் மயிலாடுதுறை நகரின் வடக்கு முனையில் உள்ளது இத்திவ்விய தேசம். காவிரியைத் தாண்டிச் செல்லப் பாலம் உள்ளது. இருப்பூர்தி நிலையத்திலிருந்து இத்திருத்தலத்திற்குக் குதிரை வண்டிகளும் மாட்டு வண்டிகளும் கிடைக்கும். விடுதியிலிருந்து நாம் நடந்தே செல்லுகின்றோம். இங்ங்னம் செல்லும்போதே திருமங்கை யாழ்வாரின் பாசுரங்களில் ஆழங்கால்படுகின்றோம். இந்த ஆழ்வார் மட்டிலுமே இத்திருத்தல எம்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார்.