பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தலைச்சங்க நாண்மதியப் பெருமாள் வைணவ சமயத்தில் எம்பெருமானைப் பற்றுதற்கு எல்லோருக்கும் எளிதான வழி பிரபத்தியாகும். பிராட்டியாரின் புருஷகார பலத்தாலே எம்பெருமானிடம் தலையெடுக்கும் குணங்கள் வாத்சல்யம், சுவாமித்துவம், செளசீல்யம், செளலப்பியம், ஞானம், சக்தி என்பவையாகும். கீழ்க் குறிப்பிட்ட ஆறனுள் முதலில் குறிப்பிட்ட நான்கு குணங்களும் சேதநன் இறைவனைப் பற்றுதற்கு மிகவும் துணை செய்யக்கூடியவை. இவற்றுள் வாத்சல்யம் என்பது, கன்றினிடத்தில் பக இருக்கும் இருப்பு. சேதநனுடைய குற்றங்களையும் போக்கியமாய் (இன்பமாய்)க் கொள்வான் எம்பெருமான். இதனால் எம்பெருமானைப் பற்ற வேண்டும் என்ற நினைப்புடன் நிற்கும் சேதநன் தன் குற்றம் கண்டு அஞ்சாமைக்கு இத்திருக்குணம் காரணமாய் அமைகின்றது. சுவாமித்துவம் என்பது, உடையனாக இருக்கும் இருப்பு. சேதநன் ஈசுவரனைக் கருதாமலும் நோக்காமலும் பாராமுகமாயிருக்கும் நிலையிலும், ஈசுவரன் இவனை விடாமல் நின்று, இவனுடைய சொரூபத்தையே நோக்கிக்கொண்டு போவதற்குக் காரணமாகவுள்ள ஒரு தொடர்பே சுவாமித்தவம் ஆகும். சேதநன் உலகப் பற்றிலேயே இச்சை வைத்து உழன்று திரிகின்றான். இங்ங்னம் சேதநன் பயனற்ற வழியில் தன் காலத்தைக் கடத்தினும், தன் உடைமையான இவனை அங்ங்னமே நலமற்ற வழியில் விட்டு விடுவதற்கு ஈசுவரனுடைய சுவாமித்துவமாகின்ற தொடர்பு இடந்தருதல் இல்லை. ஆதலின், அவன் தன் உடைமையான சேதநனை விடாது மறைந்திருந்து, பல நன்மைகளையும் விளைவிக்கின்றான். இதற்குக் காரணம் பகவானுக்கும் சேதநனுக்கும் உள்ள தொடர்பேயாகும். செளசீல்யம் என்பது, உயர்ந்தவன் 1. புருஷகாரம் - தகவுரை, சேர்ப்பிக்கும் தன்மை