பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைச்சங்க நாண்மதியப் பெருமாள் 29 தாழ்ந்தவனோடு புரையறக் கலக்கை இந்த செளசீல்யம் இருவகைப்படும். நித்தியவிபூதி, லீலா விபூதி இவற்றிற்குச் சுவாமியாய்ப் பெரிய பிராட்டியாரை முதல் துணைவியாய்க் கொண்டவனாய்த் தடை சிறிதுமற்ற சுவாதந்திரமாகிற தேஜசை உடையவனாய் இருக்கும் பரமபதநாதன் தன் பெருமையையும் தன்னோடு கலக்கும் சீவான்மாவின் சிறுமையையும் நோக்காது, தன் பேறாக அவனுடன் புரையறக் கலத்தல் ஒருவகை. சேதநன் விருப்பமின்றி இருப்பினும், பகவானே சென்று அவனோடு கலத்தல் மற்றொரு வகை. முன்னதற்குப் பாத்திரமானவர்கள் ஞானியர். பின்னதற்குப் பாத்திரமானவர்கள் நம் போலியரான சமுசாரிகள். செளலப்பியம் என்பது எளியனாயிருக்கும் இருப்பு. இது கண்ணிற்குப் புலனாகாதிருக்கும் ஈசுவரன் தன் திவ்வியமங்கள விக்கிரகத்தைச் சேதநன் தன் கண்களாலே கண்டு பற்றுவதற்கேற்ப எளியனாயிருத்தல். இதனை, "குற்றங் கண்டுவெருவாமைக்கு வாத்சல்யம்; காரியம் செய்யும் என்று துணிகைக்கு சுவாமித் துவம்; சுவாமித்துவம் கண்டகலாமைக்கு செளசீல்யம்; கண்டு பற்றுகைக்கு செளலப் பியம்...” என்று முமுட்சுப்படி குறிப்பிடும். "நிகரில் புகழாய்” என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் இந்த நான்கு குணங்களையும் வெளியிடுவர் நம்மாழ்வார். பூர்வசனபூஷணமும், “பிரபத்திக்கு அபேட்சிதங்களான செளலப் பியாதிகள், இருட்டறையில் விளக்குப் போலே பிரகாசிப்பது இங்கே" என்று இத்திருக்குணங்களை விளக்கும். இருட்டறையில் விளக்குப் போலே பிரகாசிப்பது இங்கே என்றது, பரத்துவத்தில் இந்தத் திருக்குணங்கள் உளவாக இருக்கவும், எல்லாவற்றாலும் தன்னை ஒத்திருப்பவர்களான நித்திய முத்தர்கட்கு முகம் கொடுத்திருக்கின்ற இடமாகையாலே, பகல் விளக்குப் போன்று விளக்கம் அற்றிருக்கும்; அர்ச்சாவதாரமான இடத்தில், தண்மைக்கு எல்லை நிலமான இவ்வுலக மக்கட்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கையாலே, திணிந்த இருளிலே விளக்குப்போன்று மிக்க பேரொளியாகத் தோற்றும். 2. முமுட்கப்படி - 138 3. திருவாய் 6-10:10 4. ரீவசன பூஷ - 40