பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி மயிலாடுதுறையில் காளியாக்குடி அய்யர் விடுதியில் தங்கியிருக்கும் நம்முடைய மனத்தில் இந்த எண்ணங்கள் குமிழியிடுகின்றன. நாமும் தலைச்சங்க நாண்மதியம் என்ற திருத்தலத்திற்குச் செல்ல எண்ணுகின்றோம். இத்திருத்தலம் மயிலாடுதுறை தரங்கம்பாடி தென்னிந்திய இருப்பூர்தி கிளைப் பாதையில் உள்ள ஆக்கூர் நிலையத்தினின்றும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதே பாதையிலுள்ள செம்பனார்கோயில் நிலையத்தினின்றும் ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. திருத்தலப் பயணிகள் செம்பனார் கோயில் நிலையத்தில் இறங்கி மாட்டுவண்டி அமர்த்திக்கொண்டு செல்வது நல்லது. நாம் மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் செல்லும் பேருந்தில் பயணம் செய்து வழியிலுள்ள தலைச்சங்க நாண்மதியம் (அல்லது தலைச்சங்காடு) என்ற ஊரில் இறங்குகின்றோம். ஊரிலிருந்து மேற்குத் திசையில் முக்கால் கிலோ மீட்டர் தொலைவில் வயல் களுக்கிடையேயுள்ள திருக்கோயிலுக்கு நடந்தே செல்லுகின்றோம். நடந்து செல்லுங்கால் ஊர்ப் பெயரின் ஆராய்ச்சியில் நம் மனம் ஈடுபடுகின்றது. இங்கிருந்து காவிரிப்பூம்பட்டினம் ஏழு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. பழங்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தி லிருந்து சிறந்த சங்குகள் இங்கு விற்பனை செய்யப் பெற்றதால் இவ்விடத்தைத் தலைச்சங்கம் என்று வழங்கினர். இவ்விடத்தைச் சுற்றிலும் புரச (பலாச) மரக்காடாக இருந்தமையால் இவ்விடத்தைக் காடு என்றும் வழங்கினர். நாளடைவில் இவ்விரண்டு பெயர்களும் சேர்ந்து தலைச்சங்கக் காடு என்ற திருப்பெயராக வழங்கலாயிற்று. காலப்போக்கில் மக்கள் வாக்கில் இத்திருப்பெயர் மருவி 'தலைச்சங்காடு என்ற பெருவழக்குப் பெறலாயிற்று. இவ்வூருக்கு அருகில் திருவெண்காடு என்ற ஊரும் இருப்பதால் காடு என்ற முடிவு பொருந்துவதாகக் கொள்ளலாம். திருமங்கையாழ்வாரும் 'தலைச்சங்கம் என்றே தம் திருப்பாசுரத்தில் குறிப்பிடுகின்றார். சிலப்பதிகாரக் குறிப்பும் நம் நினைவிற்கு வருகின்றது. அடைக்கலக் காதையில் வரும், “தாழ்நீர் வேலித் தலைச்செங் கானத்து நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை மாமறை முதல்வன் மாடலன் என்போன் மாதவ முனிவன் மலைவலங் கொண்டு குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து தமர்முதல் பெயர்வோன்” 5. சிலப். அடைக். வரி (11-16)