பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி குழுமி - நெருங்கி, சோதிவெள்ளம் - ஒளியின் வெள்ளம் எழுவது - எழுகின்ற; ஒர்உரு - ஒரு விக்கிரகம், ஆர்க்கும் . எப்படிப்பட்டவர்க்கும்.) என்ற பாசுரப் பகுதியில் எம்பெருமானின் திறத்தைச் சோதி வெள்ளம் - ஒளியின் வெள்ளம் என்று குறிப்பிடுவதைக் காணலாம். அன்னை ஆண்டாளும், "கதிர் மதியம் போல் முகத்தான்” என்று எம்பெருமானைச் சூரியனையும் சந்திரனையும் போன்ற திருமுகமண்டலத்தை யுடையவன் என்று பொருள்படும்படி பேசுவதைக் காணலாம். ஈண்டுத் திருமுக மண்டலத்தின் ஒளிக்குச் சூரியனும், குளிர்ச்சிக்குச் சந்திரனும் உவமையாக வந்துள்ளமை கண்டு மகிழத்தக்கது. மற்றும் இந்த அம்மையார், "திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்" என்று அவன் திருக்கண்கள் இரண்டையுமே சூரிய சந்திரர்களாகப் பேசுவதையும் கண்டு மகிழலாம். நாச்சியார் திருமொழியிலும் அம்மையார், உதயப் பருப்பதத்தின்மேல் விரியும் கதிரேபோல்வானை விருந்தா வனத்தே கண்டோமே." (பருவதம் என்ற வடசொல் பருப்பதமாக வடிவு கொண்டது) என்று போற்றுவதைக் காணலாம். திருவுருவம் உதய பருவதமாகவும் திருமுகமண்டலம் சூரிய மண்டலககவும் உருவகிக்கப் பெற்றுள்ளதைக் கண்டு மகிழ்க. இந்தச் சிந்தனைகளுடன் திருக்கோயிலுக்கு வந்து சேர்கின்றோம். திருக்கோயில் மிகச் சிறியது. மூலவருக்குக் கருவறை மட்டிலுமே உள்ளது. கருவறைக்கு முன்னர் ஒரு சிறு மண்டபமும் உள்ளது. எம்பெருமான் திருநாமம் நாண்மதியப் பெருமாள் என்பது நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலங்கொண்டு சேவை சாதிக்கின்றார். தாயாருக்குத் தனிச் சந்நிதி இல்லை. தாயார் தலைச்சங்க நாச்சியார், செங்கமல வல்லித் தாயார் என்ற திருப்பெயர்களால் வழங்கப்பெறுகின்றார். உற்சவருக்கு வெண்சுடர்ப் பெருமாள் என்பது திருப்பெயர். கருவறைக்கு வெளியே காட்சி தருகின்றார். இவர் பூரண சந்திர 9. திருப். 1 11. நாச். திரு. 14:6 10. திருப். 22