பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைச்சங்க நாண்மதியப் பெருமாள் 33 மண்டலத்தில் எழுந்தருளியிருப்பது குறிப்பிடத்தக்கது. இஃது வேறு எங்கும் காணப்பெறாத திருக்காட்சியாகும். இவர் பழங்காலத்து மூலவராக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது. இத்தலத்து மூலவர் சந்திரனது சாபந்திர்த்தமையால் சந்திர சாபஹரர் என்ற திருப்பெயராலும் வழங்கப்பெறுகின்றார். தமிழில் உள்ள நாண் மதியப் பெருமாள் என்ற திருப்பெயரை வடமொழியில் இங்ங்னம் மாற்றி வைத்தனரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இந்த எம்பெருமான் சந்நிதியில் திருமங்கையாழ்வார் மங்களா சாசனம் செய்தருளிய ஒரே ஒரு பாசுரத்தை மிடற்றொலி கொண்டு ஓதி உளங்கரைகின்றோம். கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும் தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள் விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெம்சுடரைக் கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங் கென்றுகொலோ?? (கண்ஆர் - அழகிய கடி மணம் விண்ணோர் - நித்திய சூரிகள், வெம்சுடர் - சூரியன்; ஆர - நிறைவு பெறும் அளவு) "நறுமணமும் குளிர்ச்சியும் பொருந்திய தாமரை மலர்களால் சூழப்பெற்ற தலைச்சங்காட்டின் மேல்திசையில் நித்தியசூரிகட்கு எந்நாளும் அநுபவிக்கத்தக்கவனான எம்பெருமான் இந்நிலவுகில் எல்லோரும் வணங்கும்படி எளிதில் கிட்டுபவன் ஆனான். உதயகாலத்தில் விரியும் சூரியனைப் போல மிக்கவனான அவனை இந்நிலத்தில் கண்கள் நிறைவு பெறுமளவும் கண்டு களிப்பெய்துவது என்றைக்கோ? என்று பெருமகிழ்ச்சி அடைகின்றார். இப்பெருமான் இந்த ஆழ்வாரின் உள்ளம் கவர்ந்தவராதலால் இவரது பெரிய திருமடலில் தன்னிலைமை எல்லாம் அறிவித்ததற்கு உற்ற எம்பெருமான்களுள் ஒருவராக, "நந்நீர்த் தலைச்சங்க நாண்மதியை" என்று குறிப்பிடுவதும் அறியத்தக்கது. "செப்புங்கால் ஆதவனும் திங்களும்வா னுந்தரையும் அப்புங்கா லுங்கனலும் ஆய்நின்றான் - கைப்பால் அலைச்சங்கம் ஏந்தும் அணியரங்கத்து அம்மான் தலைச்சங்க நாண்மதியத் தான்" (ஆதவன் - சூரியன்; திங்கள் - சந்திரன்; வான் - ஆகாயம், தரை . பூமி, அப்பு - நீர் கால் - காற்று கனல் - நெருப்பு ஆய் - ஆகி) சராசரங்ளாகிய யாவும் எம்பெருமானது திருமேனியே என்ற கருத்தைச் சிந்திக்கின்றோம். இந்த எம்பெருமானே ஐந்து 12. பெரி. திரு. 8-99 13. பெரிய திருமடல் - 68 14. நூற். திருப். அந் 13