பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி பூதங்களாகக் காட்சி அளிப்பதாக அய்யங்கார் கருதுகின்றார். இந்த எம்பெருமான் விலைமதிக்க வொண்ணா திருச்சங்கைத் தலையணையாகக் கொண்டுள்ளதாக ஐதிகம். இங்ங்னம் எம்பெருமானின்மீது கொண்ட நிறைந்த அநுபவத்துடன் நம் இருப்பிடம் திரும்பும் நிலையில் இக்கோயிலைப் பற்றிய சில குறிப்புகளையும் அறிகின்றோம். இந்தத் திவ்விய தேசம் சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் வரை உள்ளே செல்லவொண்ணாதபடி சுற்றிலும் சப்பாத்தி முளைத்துக் கிடந்தது. திருவாராதனமும் நடைபெறாது இருந்தது. அப்போது மிகவும் முதிர்ந்து தளர்ந்த வடுக நம்பி இராமாநுச தாசர் என்ற பெயர் கொண்ட சுவாமி ஒருவர் திருப்பணி செய்ய முன்வந்தார். அதனைத் தொடங்குமுன் அவர் காலமாகி விட்டாராதலால் அவரது சீடராகிய சுந்தர இராமாநுசதாசர் என்பார் முன்வந்து அத்திருப்பணியை அரும்பாடுபட்டு நிறைவு செய்தார். 1972 இல் இதற்குக் குடமுழுக்கு விழாவையும் நிறைவேற்று வித்தார். இந்தச் செய்தியையும் அறிகின்றோம். இந்நிலையில் மனநிறைவுடன் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம்.