பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சிறுபுலியூர் அருமா கடலமுதன் நாராயணன் என்ற சொல்லின் பொருள் நம் சிந்தையில் எழுகின்றது. “நாராயணன் என்றது நாரங்களுக்கு அயநம் என்றபடி," "நாராங்களாவன நித்திய வஸ்துக்களின் திரள் என்ற முமுட்கப்படியின் வாக்கியங்களும் நினைவிற்கு வருகின்றன. 'நாராயணன் என்பது வடசொல். இதற்கு நாரணாம், அயநம், நாராயண என்றும்; நாரா, அயனம், யஸ்ய, ஸ: நாராயண என்றும் இருவகைப் புணர்ச்சி இலக்கணம் கூறப்பெறுகின்றது. இவற்றுள் முந்தியதற்கு 'நாரங்களுக்கு ஆதாரமானவன் எவனோ அவன் நாராயணன்' என்றும், பிந்தியதற்கு "எவன் நாரம் ஒவ்வொன்றிலும் முழுமையாய் இருப்பவனோ அவன் நாராயணன்' என்றும் பொருள் கொள்ளப்பெறுகின்றன, முதற் புணர்ச்சியை ஆராய்கின்றோம். நாரா என்பதனை நோக்குகின்றோம். ர என்னும் சொல்லிற்கு 'அழிவுள்ளது என்பது பொருள். நகரம் அதனை மறுக்கின்றது. ஆகவே, இவ்விரண்டு சொற்களும் சேர்ந்து அழிவற்றது (நித்தியம்) என்னும் பொருளைத் தரும். நர என்னும் சொல் வடமொழி இலக்கணத்தின்படி நார' என்றாகி, அழிவில்லாத பொருள்களின் திரளைத் தெரிவிக்கின்றது. பன்மை வேற்றுமை சேரும்போது 'நார' என்றாகி பொருள்களின் திரள்களை அறிவிக்கின்றது. எனவே நர' என்பது அழிவுற்ற பொருளையும், 'நார' என்பது அழிவற்ற பொருள்களின் திரளையும், 'நாரா என்பது மேற்கூறிய திரள் பல என்பதையும் காட்டாநிற்கும். ஒரு பொருளுக்குள்ள இயல்பு இருவகைப்படும். இவ்விரண்டும் சாத்திரங்களில் 'சொருப நிருபக தருமம்' என்றும், ‘நிருபித சொருப விசேஷணம்’ என்றும் சொல்லப் பெறுகின்றன. ஒரு பொருளை எந்த இயல்போடு சேர்த்தே அறிகின்றோமோ, எந்த 1. முமுட்கப்படி. 95, 96