பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி இயல்பை விட்டு அதை அறிய முடியாதோ, அஃது அந்தப் பொருளுக்குச் சொருப நிருபக தருமம் எனப்படும். மேற்கூறிய இயல்பைக்கொண்டு அப்பொருளை அறிந்த பின்பு, அதற்குள்ள மற்ற இயல்புகளை அறிந்துகொள்ள நேரிடுகின்றதோ அது நிருபித சொருப விசேஷணம்' என்று சொல்லப்பெறும். எடுத்துக்காட்டாக, மலருக்கு மணம் 'சொருப நிருபக தருமம்; அதிலுள்ள நிறம் முதலியன நிருபித சொரூப விசேஷணம்.” இங்கு 'நாராயண' என்றும் சொல்லில் உள்ள நாரா என்பது, பரமான்மா நீங்கலாக, மற்றப் பொருள்கள் யாவற்றையும் சொல்லுகிறதெனக் கொள்ளல் வேண்டும். இக்கோட்பாட்டின்படி சித்தையும் அசித்தையும் மற்றப் பொருள்கள் என்று இயம்புதல் போன்றே, பரமான்மாவிற்குரிய குணங்களையும் மற்றப் பொருள்கள் எனவே கூறுதல் வேண்டும். ஆதலின் அவற்றுள் முதன்முதல் பரமான்மாவிற்குள்ள 'சொருப நிருபக தருமங்களை நோக்குவோம். ஞானத்துவம், ஆனந்தத்துவம், அமலத்துவம், சத்யத்துவம், அநந்தத்துவம் ஆகியவை பரமான்மாவின் 'சொருப நிருபக தருமங்கள் எனப்படும். ஞானத்துவம் என்பது, அறிவின் தன்மை. உள்ளும் புறமும் உப்பாகவே இருக்கும் உப்புக் கட்டியைப் போன்று பரமான்ம தத்துவம் முற்றும் ஞானமாகவே இருக்கும். அறிவின் தன்மை அதன் இயல்பாகும். ஆனந்தத்துவம் என்பது, விரும்பப்படும் பொருளின் தன்மை. தேன், பால், கன்னல் முதலியவற்றை உண்ணும்போது ஓர் இன்பம் தோன்றுகின்றதல்லவா? இவ்வின்பத்தின் பொருட்டே அவற்றை விரும்புகின்றோம். அந்த இன்பம் விரும்பும் பொருளாய் இருக்கின்றதே, அஃது எதன் பொருட்டு? என்று ஒரு வினா எழுமாயின், அதற்கு என்ன விடை சொல்ல முடியும்? அதுபோலவே, "பிரம்மம் ஸவத:' விரும்பப்படும் பொருளாக உள்ளது. அதனுடைய தன்மையே ஆனந்தத்துவமாகும். அமலத்துவம் என்பது, தான் குற்றமற்ற பொருளாயிருத்தல் மட்டுமேயன்றி, மற்றப் பொருள்களின் குற்றங்களையும் போக்குவது எதுவோ, அஃதே அமலப் பொருளாகும். அதனுடைய தன்மையே 'அமலத்துவம் எனச் சொல்லப் பெறுகின்றது. சத்தியத்துவம் என்பது, அசித்திற்குள்ள பண்பின் வேறுபாடும், வடிவத்தின் வேறுபாடும் சித்திற்குள்ள பண்பினுடைய விகாரங்களும் அற்றிருப்பது எதுவோ, அதுவே சத்தியப் பொருளாகும். அதன் தன்மையே சத்தியத்துவம் என்பது எல்லா நாடுகளிலும் ஆன்மாகவிருக்கும் பொருள் எதுவோ, அதுவே அந்தப் பொருளாகிய தத்துவம் ஆகும். அவ்வந்தப் பொருளின் தன்மை அநந்தத்துவம் எனப்படும்.