பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுபுலியூர் அருமா கடலமுதன் 37 எம்பெருமானின் ஞானம், சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேஜஸ் என்னும் குணங்கள் நிருபித சொரூப விசேஷணங்களாகும்.' இவற்றைச் சார்ந்த வாத்சல்யம், செளசீல்யம், சுவாமித்துவம், செளலப்பியம் முதலிய எண்ணிறந்த மங்கள குணங்களும் இவற்றுள் அடங்கும். இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் குமிழியிட்ட வண்ணம் மயிலாடுதுறை காளியாக்குடி அய்யர் விடுதியிலிருந்து சிறுபுலியூர் என்ற திவ்விய தேசத்திற்குப் புறப்படுகின்றோம். இத்திருத்தலம் மயிலாடுதுறை - காரைக்குடி கிளை இருப்பூர்திப் பாதையில் கொல்லுமாங்குடி என்ற நிலையத்திற்குக் கிழக்கே நடந்து சென்றால் ஒரு மைல் தொலைவில் உள்ளது. மாட்டு வண்டியில் சென்றால் 3 மைல் சுற்ற வேண்டும். இந்நிலையம் மயிலாடுதுறை சந்திப்பிலிருந்து 8 மைல் தொலைவில் உள்ளது. நல்ல வசதிகளை வேண்டுவோர் மயிலாடுதுறை நகரிலிருந்து கிளம்புவதே சிறந்ததாகும். 'சிறுபுலியூர் என்பது திருத்தலத்தின் திருநாமம். சலசயனம்’ என்பது திருக்கோயிலின் திருநாமம். திருக்கடன் மல்லையில் (மாமல்லபுரத்தில்) தலசயனப் பெருமாள் கிடக்குமிடம் தலசயனம் என்று வழங்கப்பெறுகின்றது. திருமங்கையாழ்வாரின் மங்களா சாசனத் திருமொழிப் பாசுரங்கள் தோறும் 'சிறுபுலியூர் சலசயனம்’ என்றே இத்திருக்கோயில் குறிப்பிடப்பெறுகின்றது. எம்பெருமான் புலிக்கால் முனிவருக்கு (வியாக்ரகபாதர்) பாலசயனமாய்ச் சேவை சாதித்த தலமாதப் பற்றி இவ்வூர் சிறுபுலியூர் என வழங்கப் பெற்றதாகக் கூறுவர். ‘சலம் என்பது மாயை, உறங்குவான் போல் யோகு செய்வதற்குக் கொண்ட சயனமாதலால், மாயப்படுக்கை' எனப்பட்டது. மயிலாடுதுறையிலிருந்து பேருந்தில் வந்து கொண்டிருக்கும்போதே நம்மனம் இந்தச் சிந்தனையில் ஈடுபட்டிருக்கின்றது. பேருந்து ஊரருகில் வந்ததும் வண்டியை விட்டு இறங்கி ஊரை நோக்கி நடக்கின்றோம். தமிழகத்தில் மருதநிலவளத்திற்குப் பேர்போனது கீழ்த்தஞ்சை, சிறப்பாக நன்னிலம் வட்டம். சோலைகளும் வாவிகளும் நீர் ஓடைகளும் நிறைந்த ஊர் சிறுபுலியூர். திருமங்கையாழ்வார் மருத நில வளத்தைத் தம் பாசுரங்களில் மிக அழகாகக் காட்டுவார். “வெள்ளம்முது பரவைத்திரை விரிய கரைஎங்கும் தெள்ளும்மணி திகழும்.சிறு புலியூர்” 2. வியாக்ரக பாதர் வியாக்ரகம் - புலி, பாதர் - கால்களையுடையவர். 3. பெரி. திரு. 7-9:1