பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி (வெள்ளம் . நீர்ஒட்டம், முதுபரவை - பழையதானகடல்; திரை - அலை; தெள்ளும் கொழிக்கப் பெற்ற, மணி - இரத்தினங்கள்) "கடல் வெள்ளம் அலையெறிந்து நவமணிகளைக்கொண்டு வந்து கொழிக்கும் நீர்க் கரைகளையுடையது சிறுபுலியூர்” என்கின்றார் ஆழ்வார். “அறையும்புனல் ஒருபால், வயல்ஒருபால்; பொழில்ஒருபால், சிறைவண்டு இனம்.அறையும் சிறுபுலியூர்” (அறையும் - ஒலிக்கின்ற; புனல் - நீர் ஒருபால் - ஒரு பக்கம்; பொழில் - சோலைகள்; சிறை - சிறகுகள், இனம் - திரங்கள்) “ஊரைச் சூழ்ந்த நீர்நிலைகளிலும் வயல்களிலும் பொழில்களிலும் வண்டுகள் இன்னொலிகளை எழுப்பிக் கொண்டுள்ளன; கண்ணுக்கும் செவிக்கும் விருந்து ட்டும் சூழ்நிலையை உடையது சிறுபுலியூர்” என்கின்றார் ஆழ்வார். நீர்நிலைகளில் வண்டுகள் ஒலிக்குமோ? என்ற வினா எழுகின்றது. நீர்நிலைகளில் மதுவோடு கூடிய வெள்ளப் பெருக்கம் இருக்குமாதலால், மதுவின் நசையினால் வண்டுகள் வந்து மொய்க்கும். கம்பநாடனும், ‘ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பிகந்து ஊக்கமே மிகுந்து உள்தெளிவு இன்றியே தேக்கு எறிந்து வருதலில் தீம்புனல் வாக்கு தேனுகர் மாக்களை மானுமே” (மொய்ப்ப - மொய்க்க: வரம்பு . எல்லை; இகந்து . கடந்து ஊக்கம் . உற்சாகம்; தேக்கு - ஏப்பம், எறிந்து . வீசிக் கொண்டு; வாக்கும் . வார்க்கும்; தேன் - கள்; நுகர் - குடிக்கின்ற; மாக்கள் - மனிதர்கள்; மானும் - ஒத்திருக்கும்) என்ற பாடலில் இதனைக் காட்டுவன். கட்குடியரையும் ஆற்று வெள்ளத்தையும் ஒப்பிட்டுக் காட்டும் பாடல் இது. கட்குடியரைக் கூறுமிடத்து ஈக்கள் வண்டொடு மொய்த்தல் அவரிடத்துள்ள கள் நாற்றத்திற்காக ஈக்களும் வண்டுகளும் மொய்த்தலும், வரம்பு இகத்தல் தமது குலம் குடிப்பிறப்பு என்ற இவற்றுக்கு ஏற்ற ஒழுக்கத்தைக் கைவிடுதலும், ஊக்கம் மிகுதல் உற்சாகம் மிகுதலும், உள்தெளிவு இன்மை - மனம் தெளிவு பெறாமையும், தேக்கு எறிதல் - ஏப்பம் விடுதலும் ஆகியவற்றைக் கட்குடியாரிடம் காணலாம். ஆற்று வெள்ளத்தைக் கூறுமிடத்து ஈக்கள் வண்டொடு மொய்த்தல் அடித்துச் செல்லும் பல்வகை மலர்களிலுள்ள தேன் முதலியவற்றிற்காக ஈக்களும் வண்டுகளும் மொய்த்தலும், வரம்பு இகழ்தல் கரை கடந்து செல்லுதலும், ஊக்கம் மிகுதல் வலிமை 4. மேலது 7-9:3 5. கம்பரா. பால. ஆற் - 10