பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணபுரத்துக் கருமணி நாடிர் நாள்தோறும் வாடா மலர்கொண்டு பாடிர் அவன்நாமம் வீடே பெறலாமே." என்பது திருவாய்மொழி. பெரியோர்கள் திருநாட்டுக்கு எழுந்தருளும் இறுதி நேரத்தில் தமக்கு மிகவும் வேண்டியவர்கட்கு இறுதிவாக்காகச் சில சொல்லிப் போவதுண்டு. இதனைச் ‘சரம சந்தேசம் என்று வழங்குவர். எம்பெருமான் நமமாழ்வாரைத் திருநாட்டுக்குக் கொண்டுபோக விரையா நிற்கின்றான்; ஆழ்வாரும் தமக்குப் பிராப்தி (அடைய வேண்டிய பொருள்) தப்பாது என்று துணிவு கொள்ளுகின்றார். இவர் சம்சாரிகளாகிய நம்போலியர் பக்கல் பரம கருணையே வடிவெடுத்தவராகையாலே, முதற்பத்தில் ‘விடுமின் முற்றவும்” என்று பரோபதேசம் (பிறருக்கு உபதேசம்) செய்யத் தொடங்கி, பத்துதோறும் உபதேசம் செய்வதில் கருத்துள்ள பதிகங்களை அருளிச்செய்து வந்து, இப்பதிகத்தோடே பரோபதேசத்தைத் தலைக் கட்டுகிறாராதலின் இது 'சரம சந்தேசம்' ஆகின்றது. மக்கட் பிறவிக்கு இயல்பானதும் இன்றியமையாததுமான செயலைப் புரியவே புருஷார்த்தம் (புருஷன் - ஆன்மா, அர்த்தம் அடைய வேண்டிய பொருள்) இயல்பாகவே வந்து கிட்டும் என்கின்றார் இப்பாகரத்தில். ‘செவ்வி மாறாத மலர்களைக் கொண்டு அவன் திருப்பெயரை உவகைக்குப் போக்குவீடாகச் சொல்வீர்களாக, அப்படிச் செய்யவே ஆன்மாவிற்கு ஒத்ததான கைங்கரியத்தைப் பெறலாம் என்பது ஈடு. நாடீர் நாள்தோறும் என்பதற்கு, பசித்த போதெல்லாம் உண்ணுமாப் போலே என்பது ஈட்டுரை. வாடாமலர் கொண்டு உங்களுடைய பக்திக்குத் தகுதியான மலர்களைக் கொண்டு என்றபடி. 1. திருவாய் 10-5:5 2. மேலது 1.2