பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணபுரத்துக் கருமணி 45 மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி ஆர்வம் என்பதோ பூஇட வல்லார்க்கு” (மார்வம் - இதயம்; ஆர்வம் - பக்தி) என்பதனால் அன்பாகிய மலர் என்று சொல்லலாம்; ஆன்மாவாகிய மலர் என்றும் சொல்லலாம். கந்தமா மலர் எட்டும் இட்டு' எனவும், 'இனமலர் எட்டும் இட்டு’ எனவும் ஆழ்வார்கள் அருளிச் செய்வதனால் அந்த எட்டுமலர்கள் என்றும் கூறலாம். எட்டு மலர்களாவன. செங்கழுநீர், செண்பகம், இருவாட்சி, பாதிரி, புன்னை, குருக்கத்தி, தாமரை, தாழை என்பன. இவற்றையே வாடாமலராகச் சொல்லிற்றாகவும் கொள்ளலாம். பாடீர் அவன் நாமம் - முக்தர்கள் சாம கானம் பண்ணுமாப்போலே அவனுடைய திருப்பெயர்களை பக்தியுடன் பாடுங்கள் என்றபடி, இப்பாசுரத்தில் மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களும் செயற்படுகின்றன என்பதைக் காணலாம். நாடீர் என்பதனால் மனத்தின் தொழிலையும், 'வாடாமலர் கொண்டு என்பதனால் உடலின் தொழிலையும், பாடீர் என்பதனால் வாக்கின் தொழிலையும் சொல்லிற்றாகக் கொள்ளலாம். இனியதனைச் செய்யப் பெரியதனைக் கொள்ளலாம் என்று உரைத்தபடியைக் கண்டும் மகிழலாம். இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் குமிழியிட்ட வண்ணம் சிறுபுலியூரிலிருந்து திருக்கண்ணபுரத்திற்குப் புறப்படுகின்றோம். இஃது ஒரு சிற்றுார். திருவாரூரையும் மயிலாடுதுறையையும் இணைக்கும் தென்னிந்திய இருப்பூர்திப் பாதையில் நன்னிலம் நிலையத்திலிருந்து சுமார் ஒன்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. நாம் சிறுபுலியூரிலிருந்து பேருந்து மூலம் நன்னிலம் வருகின்றோம். நன்னிலத்திலிருந்து நாகூர் செல்லும் பேருந்தில் ஏறி திருப்புகலூர் என்ற திருத்தலத்தில் (திருநாவுக்கரசர் முக்தி அடைந்த திருத்தலம்) இறங்குகின்றோம். திருப்புகலூரில் தங்குவதற்கும், உணவு கொள்வதற்கும் விடுதிகள் உள்ளன. மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் இங்கு கிடைக்கும். குதிரை வண்டி ஒன்றை அமர்த்திக்கொண்டு, ஆற்றைப் பாலத்தின் வழியாகக் கடந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருக்கண்ணபுரத்தை அடைகின்றோம். கண்ணபுரத்து எம்பெருமானைக் குலசேகரப் பெருமாள், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் என்ற 3. பெரியாழ். திரு. 4.5.5:3 4. பெரி. திரு. 3.5:6