பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி இந்த ஊரில் எழுந்தருளியிருக்கும் அம்மானை 100 பாசுரங்களாலும் (பத்துத் திருமொழிகளால்)” இரண்டு தனிப் பாசுரங்களாலும் மங்களா சாசனம் செய்து மகிழ்கின்றார் திருமங்கையாழ்வார். இவற்றுள் தானான தன்மையில் பாடியவை ஐந்து பதிகங்கள். பிராட்டியின் நிலையை ஏறிட்டுக்கொண்டு வேற்று வாயால் பேசியவை ஐந்து பதிகங்கள். இவற்றுள்ளும் தாய் நிலையில் நின்று பேசியவை இரண்டு திருமொழிகள், தலைமகள் நிலையில் நின்று பேசியவை மூன்று திருமொழிகள். திருநெடுந்தாண்டகத்திலுள்ள ஒன்று (16) தாய்ப் பாசுரம்; மற்றொன்று (27) மகள் பாசுரம். மகள் பாசுரமாக வந்தவற்றுள் கோல்தும்பி பதிகத்தை மேலே காட்டினோம். தலைமகனைப் பிரிந்த தலைமகள் இரங்கிப் பேசுகின்றாள். வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரிவளையே (8.3:1) கரி வெருவ மருப்பொசித்தாற்கு இழந்தேன் என் செறிவளையே (2) என்று பல்வேறுவிதமாக எம்பெருமானின் பெருமையைப் பேசிப்பேசி தன் வளையலை இழந்த நிலையை எண்ணி எண்ணி இரங்குகின்றாள் பரகாலநாயகி. இங்ங்னமே, தாய் நிலையிலிருந்து கொண்டு தன் மகள் நிலையையும் பேசுகின்ாறள். “எம்பெருமானுடைய திவ்யா யுதங்களைக் கண்டு உகந்து அவற்றையே வாய்வெருவுகின்றாள். திருத்தோள்களைப் பேசுகின்றாள்; நாயகனிடம் அன்பு உண்டான பின்பு முலையில் பசலை நிறம் தோன்றுதல் இயல்பு; ஆனால், இவளிடம் அன்பு விளைவதற்கு முன்னம் பசலை நிறம் தோன்றிவிட்டது. (8.1:1). செருவரை முன் ஆசறுத்த சிலையன்றோ கைத்தலத்து என்கின்றாள். பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாள். ஒருவரையும் நின் ஒப்பார், ஒப்பிலா என் அப்பா என்கின்றாள் (2). இவ்விடத்தில் வியாக்கியானத்தில் ஓர் ஐதிகம். ஒரு சமயம் திருக்கண்ணபுரத்து அரையர் ஒருவர் விரோதிகளால் நோவுபட நேர்ந்த காலத்து செளரிராஜன் திரு முன்பே சென்று செருவரை முன் ஆசறுத்த சிலையன்றோ கைத்தலத்து என்று தாளந்தட்டி விண்ணப்பம் செய்தாராம், பெருமாள் திருவுள்ளம் உவந்தருளி அரையரை நோக்கி, "ஒய் நீர் அஞ்சவேண்டா, ஒரு கண நேரத்தில் விரோதிகளை முடிக்கின்றோம்” என்று அருளிச் செய்து அப்படியே தலைகாட்டினாராம் - என்பதாக, திருத்துழாய் மாலை, மகர குண்டலங்கள், மணி ஆரம் இவற்றைப் பேசி மகிழ்கின்றாள் (3); தாராய தண்துளப வண்டுழுத வரை மார்பன், போர் ஆனைக் 23. திரு. நெடுந் 16.27