பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி காணாமையாலே கண்ணிர்கள் முலைக் குவட்டில் துளிசோரச் சோர்கின்றாள். துணை முலைமேல் துளிசோரச் சோர்கின்றாள் என்பதைத் தனித்தனியே கூட்டியுரைத்துப் பொருள் கொண்டால் பரகால நாயகியின் காதல் உறைப்பினைத் தெளிவாக அறியலாம். மாலைநேரம் வருகின்றது. இருள் கவிகின்றது. இந்தச் சூழ்நிலையில் பிரிவுத் துன்பத்தால் வருந்தும் பரகாலநாயகி புலம்புகின்றாள்: ‘எம்பெருமானிடம் என்நெஞ்சு போய்விட்டது; அப்பெருமானின் கிருபையைப் பெறுவதற்குச் சமயம் நோக்கியிருந்த என்னை நிலவுக்கதிர் சுடுகின்றது; தென்றற் காற்று என் முலைத் தடங்களில் வீசி வலி செய்கின்றது (8.5-1) ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும் தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன; செய்வது ஒன்று அறியேனே (2) (துஞ்சுதல் - தூங்குதல்; ஒளியவன் - சூரியன், விசும்பு - ஆகாயம்) இவ்விடத்தில் ஓர் ஐதிகம்: எம்பெருமானார் திருவடிகளில் ஆச்ரயித்த பிள்ளையுறங்கா வில்லிதாசர் திருநாட்டுக் கெழுந்தருளினபோது அவரைப் பிரம்மரதத்தில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு சென்றனர் அவர்தம் உறவினர்களும் நண்பர்களும். அவர்தம் திருத்தேவியரான பொன்னாச்சியார் பிரிவாற்றாமைப் பாசுரமாகிய இத்திருமொழியை அநுசந்திக்கத் தொடங்கினார். முதற் பாசுரத்தை அநுசந்தித்து இரண்டாவதான இப்பாசுரத்தை அநுசந்திக்க நேரும்போது பிரம்மரதத்தைச் சுமந்து செல்பவர்கள் விரைந்து சென்றதனால் தேர் மறைந்தது. அதற்குத் தகுந்தவாறு பொன்னாச்சியின் அநுசந்தானம் தேரும் போயிற்று; திசைகளும் மறைந்தன; செய்வது ஒன்று அறியேனே என்ற அடியில் சென்றது. அப்போதே பொன்னாச்சியாரின் உயிரும் தன்னடைவே விட்டு நீங்கிப் போயிற்று. இத்திருமொழி முழுவதும் ஆழ்வார் நாயகியின் புலம்பலைக் கேட்கின்றோம்; நாமும் அந்நிலையை அடைய முயல்கின்றோம். தானான தன்மையில் நின்று பேசும்போது “கண்ணபுரம் நாம் தொழுதுமே” என ஒரு தடவைக்கு ஒன்பது தடவையாகச் சொல்லி “தொண்டீர், உய்யும் வகை கண்டேன்” என்று தொண்டர்களை ஆற்றுப்படுத்துகின்றார்; தன் மனத்திற்கும் "வருந்தாது இரு நீ, மடநெஞ்சே, நம்மேல் வினை சாரா” என்றும் (8-6-6) "மால் ஆய், மனமே! அருந்துயரில் வருந்தாதிரு” என்றும் (8-6-8) உபதேசம்