பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அணிஅழுந்துர் நின்ற அஞ்சனக் குன்றம் நம்மாழ்வார் கிருஷ்ணாவதாரத்தில் அதிகமாக ஈடுபட்டவர் என்பதை அவர் இயற்றிய நான்கு பிரபந்தங்களாலும் அறியக் கிடக்கின்றது. மண்ணும் விண்ணும் எல்லாம் உடனுண்டநம் கண்ணன்கண், அல்லது இல்லை யோர்கண்னே' என்பதில் ‘மண்ணாடும் விண்ணாடும் வானவரும் மற்றும் எல்லாம், உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட” என்ற வரலாறு காட்டப்பெறுகின்றது. கறுத்தமனம் ஒன்றும் வேண்டா, கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை’ சிறு தெய்வ வழிபாட்டிலும் அவை நாராயணன் வழியாகக் காக்கின்றனவேயன்றித் தாமாக அன்று என்பதை அறுதியிடுகின்றார் இதில், இன்னும், கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்;அது நிற்க,வந்து திண்ண மாதும் உடைமை உண்டேல் அவனடிசேர்ந் துய்மினோ' (அது - இந்த உண்மை; திண்ணமா - திடமாக உடைமை - நும்முடையதாக நினைத்திருக்கும் பொருள்; அவன் அடி சேர்த்து - அவன் திருவடிகளில் சமர்ப்பித்து) என்ற பாசுரத்தில் உண்டேல்' என்பதால் நும்முடைமை என்று சொல்லக் கூடிய பொருள் உண்மையில் அவனுடையது என்ற ஆழ்வார் திருவுள்ளம் தெளிவாகின்றது. இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, 1. திருவாய். 2.21 3. திருவாய். 5.2:7 2. பெரி. திரு. 11.6:7 4. மேலது. 9.1.10