பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி விபவாதாரங்களை எண்ணும்போது நரசிம்மன், பரசுராமன், ஆதிவராகம், வாமன - திரிவிக்கிரமன், ஹயக்ரீவன், இராமன், கிருஷ்ணன் என்ற இந்த எம்பெருமான்கள் ஆழ்வார் சிந்தையில் எழுகின்றனர். “சிங்கம் அது ஆய் அவுணன் திறல் ஆகம் முன்கீண்டு” (7-6-1) என்றும், “சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி, திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு (7-8-5) என்றும் நரசிங்கப் பெருமானை நினைக்கின்றார். "ஆதிவராகம் முன் ஆனாய்” (7.7-40) என்றும், சிலம்புமுதல் கலன்அணிந்து ஒர்செங்கட் குன்றம் திகழ்ந்ததென திருஉருவம் பன்றி ஆகி இலங்குபுவி மடந்தைதனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய ஈசன்" என்றும் வராகப் பெருமானை அநுபவிக்கின்றார். "பன்னுகலை நால்வேதப் பொருளையெல்லாம் பரிமுகமாய் அருளிய எம்பரமன் காண்மின்” (7-8:2) என்று ஹயக்ரீவ மூர்த்தியைப் போற்றுகின்றார். வானவர்தம் துயர்தீர வந்து தோன்றி மாண்உருவாய் மூவடிமா வலியைவேண்டி தான்அமர ஏழ்உலகும் அளந்த வென்றித் தனிமுதல்சக் கரப்படைஎன் தலைவங்ன காண்மின்" என்று வாமன - திரிவிக்கிரமாவதாரத்தை அநுபவித்து இனியராகின்றார். “கோவானார் மடியக் கொலைஆர் மழுக் கொண்டருளும் மூவா வானவன்” (7-6-2) என்று பரசுராமனைப் பகர்கின்றார். அவதாரங்களில் இராமனும் கிருஷ்ணனும் அதிக இடம் பெறுகின்றனர். இராமனைக் கருதும்போது இராவணனது பத்து தலைகளையும் கைகளையும் அறுத்த (7-5-1, 7-8-7) செயல்களை அநுசந்திக்கின்றார். கண்ணனை நினைக்கும்போதுதான் பார்த்தனுக்குத் தேரேறிச் சாரதியானது, குன்றேந்தி மாரி தடுத்தது, கஞ்சனைக் காய்ந்தது, பூதனையிடம் முலையுண்டு அவளது உயிர் குடித்தது, தயிர் நெய் அமுது செய்தமையால் தாயால் ஆப்புண்டது, விடை ஏழை அடர்த்தது, கும்பமிகு குவலயா பீடத்தைக் கொன்றது, குரவை கோத்தது, சகடாசூரனை உதைத்துக் கொன்றது போன்ற வெற்றிச் செயல்கள் ஒவ்வொன்றாகத் தோன்றி ஆழ்வாரை மகிழ்விக்கின்றன. 15. பெரி. திரு. 7.8:4 ஒப்பிடுக. பெரி. திரு. 4.4:8 16. பெரி. திரு. 7.8:6