பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளக்குளத்து அண்ணன் 79 இக்கூறியவாறு சிந்தித்த வண்ணம் நாம் திருக்கோயிலை வந்தடைகின்றோம். எம்பெருமானின் திருநாமங்கள் கண்ணன், நாராயணன், தாயார், பூவார் திருமகள் நாச்சியார். கிழக்கே திருமுக மண்டபம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றான் எம்பெருமான். திருவேங்கடமுடையானைச் சேவிப்பது போன்ற அநுபவம் நமக்கு ஏற்படுகின்றது. திருமங்கையாழ்வாரின் பத்துப் பாசுரங்களையும் (4-7) சந்நிதியில் மிடற்றொலி கொண்டு ஒதி உளங்கரைகின்றோம். இந்நிலையில் திவ்விய கவியின் திருப்பாடலும் நினைவிற்கு வருகின்றது. நான்அடிமை செய்யவிடாய் நான்ஆனேன் எம்பெருமான் தான்அடிமை கொள்ளவிடாய் தான்.ஆனான்-ஆனதற்பின் வெள்ளக் குளத்தே விடாய்இருவ ரும்தணிந்தோம் உள்ளக் குளத்தேனை ஒத்து." (அடிமை தொண்டு; விடாய் - பேராவல்) என்பது பாடல். “எம்பெருமானுக்குத் திருத்தொண்டு செய்தாலன்றித் தரித்திருக்கவெண்ணாத நிலை எனக்கு உண்டாயிற்று உடையவன் பயிர்த் தலையில் குடிசை கட்டிக் கொண்டு நிற்பதுபோல எம்பெருமானும் திவ்வியதேசங்கள் தோறும் எழுந்தருளியிருப்பது எப்போது சேதந லாபம் தனக்கு நேருமோ என்று பேராவல் கொண்டு எதிர்பார்த்து நிற்க, நான் அங்குச் சென்று அப்பிரானை அடிமை செய்யவே; அப்பிரானும் உவந்து என்னை ஆட்கொள, அதனால் இருவரும் விடாய் தீரப் பெற்றோம்” என்கின்றார். 'திருவெள்ளக்குளம்’ என்ற அந்தத் திவ்விய தலத்தின் திருநாமத்திற்கேற்ப, 'விடாய் தணிந்தோம் என்று சமக்காரம் தோன்றக் கூறியது சிந்தித்து அநுபவிக்கத்தக்கது. மனநிறைவு பெற்ற நிலையில் நாம் வண்புருடோத்தமத்தை நோக்கிப் பயணமாகின்றோம். 15. நூற். திரு. அந் 39