பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. நாங்கூர் புருடோத்தமன் “(ரீ) என்று பெரிய பிராட்டியார்க்குத் திருநாமம்' என்பது முமுட்கப்படி துவயமந்திரத்திலுள்ள ரீ என்பது பெரிய பிராட்டியாரைக் குறிக்கும் திருநாமம் ஆகும். ரீ என்பதற்கு செல்வம், அழகு என்னும் பல பொருள்கள் உண்டு. இவற்றுள் பெரிய பிராட்டியார் என்னும் பொருளே இங்குக் கொள்ளத்தக்கதாகும். இப்பெரிய பிராட்டியாருக்கு இலக்குமி, பத்மா, கமலா, அரிப்பிரியா g என்னும் பல திருநாமங்கள் அமைந்துள்ளன. இவற்றுள் ரீ என்னும் திருநாமம் மற்றவற்றைப் போன்றதன்று; மிக முக்கியமானதெனக் கொள்க. ஈசுவரனுக்கு எங்ங்னம் அ என்னும் ஒலி சிறந்த திருநாமமோ, அங்ங்னமே பெரிய பிராட்டியாருக்கும் g என்னும் இத்திருநாமம் சிறந்ததாகும். எவ்வாறு அ என்னும் பதம் ஈசுவரனுடைய இரட்சகத்திற்கு இன்றியமையாத இயல்புகளைத் தெரிவிக்கின்றதோ, அவ்வாறே ரீ என்னும் இப்பதமும் பிராட்டியாரின் புருஷகாரத்திற்கு இன்றியமையாத இயல்புகளைத் தெரிவிக்கின்றது. புருஷகாரம் என்பது சேர்ப்பித்தல். அதாவது சேதநனை ஈசுவரனோடு சேர்ப்பித்தலாகும். ரீ என்ற சொல்லுக்கு ஆறு பொருள்கள் கூறப் பெறுகின்றன. ஈசுவரனுடைய சுவாதந்திரியத்தை மாற்றுதல் சேதநனுடைய தீம்மனத்தை மாற்றுதல் என்ற இரண்டு நரு என்ற தாதுவிலே (வேர்ச் சொல்லில்) பிறந்த ரீ ஒலியின் பொருள் ஈசுவரனுக்குக் கிருபை' முதலான குணங்களைத் தோற்றுவித்தல், சேதநனுக்கு ருசி" முதலியவற்றைத் தோற்றுவித்தல் என்னும் இரண்டு பொருள்களும் ஸ்ரு என்ற தாதுவினின்றும் பிறந்த ரீ சப்தத்தின் பொருளாகும். மேலும் இரண்டு பொருள்களைக் காண்போம். ஒன்று, 'அழித்தல்; அதாவது போக்குதல் என்பது. மற்றொன்று 1. முமுட்கப்படி - 123