பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

“அன்றியும் சம்பந்தர் கோயிலுக்கு இவன் பொன் வேய்ந்தான் என்று ஒரு பாடல் கூறுகிறது.

“தென்வேந்தன் கூனிமிர்த்த செந்தமிழர் தென்கோயில்
பொன்மேய்ந்து திக்கைப் புகழ்வேய்ந்தான்”.

இதனுள் ’தென்வேந்தன்’ என்றது கூன்பாண்டியனை 'கூன்நிமிர்த்த செந்தமிழர்’ என்றது ஞானசம்பந்தரை.

இனி, இம்மணவிற் கூத்தன் திருமுறைகளைச் செப்பேடு செய்வித்தான் என்பது சிறப்பாகக் குறிப்பிடத் தக்க செய்தியாகும்.

முற்திறத்தார் ஈசன் முதல் திறத்தைப் பாடியவாறு
ஒத்தமைத்த செப்பேட்டி னுள்ளெழுதி-இத்தலத்தின்
எல்லைக் கிரிவாய் இசையெழுதி னான்கூத்தன்
தில்லைச்சிற் றம்பலத்தே சென்று.

இதில் ”பாடியவாறு” என்ற சொற்றாெடர் கவனிக்கற்பாலது. சம்பந்தர் அப்பர் சுந்தரர் ஆகியவர்கள் பதிகங்களை எம்முறையில் பாடியருளினார்களோ அம் முறையிலேயே அப்பதிகங்கள் மனவிற்கூத்தனது முயற்சியால் எழுதப்பட்டன என்று இச்சொற்றாெடரால் அறியலாகும். எத்தலத்துக்குப் பின் எத்தலத்திற்குச் சமய (குரவர் சென்றார்கள் என்றும், அங்குப் பாடிய பதிகங்கள் எவை என்றும், ஆய்ந்து, திருவருட்டுணைகொண்டு, பெரிய புராணத்தை எழுதியவர் சேக்கிழார் என்பது யாவரும் அறிந்ததொன்று. சேக்கிழார் காலத்துக்கு முன்பே பதிகங்கள் பாடிய வரிசைமுறை கொண்ட செப்பேடுகள் இருந்தன என்பது இப்பாடலால் உறுதி பெறுமாயின், சேக்கிழார் சுவாமிகளுக்கு இச்செப்பேடு