பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

ரினராவர். எனவே இராமப் பெயர் வைத்திருப்பினும் சாசனச் சேக்கிழார், பெரிய புராணம் பாடிய சேக்கிழாராதற்குத் தடையின்று.

முடிந்தது முடித்தல்: இதுகாறும் கூறியவாற்றான் இரண்டாம் இராசராசனுடைய 17-ஆம் ஆட்சியாண்டுக்குரிய திருமழபாடிக் கல்வெட்டில் கண்ட சேக்கிழாரே பெரிய புராணம் அருளிய சேக்கிழார் ஆவர் என்று கொள்ளலாம். இரண்டாம் குலோத்துங்கன் கி. பி. 1150 வரை அரசாண்டவன். இரண்டாம் இராசராசனது ஆட்சி 1146 முதல் கணக்கிடப் பெறும். எனவே திருமழபாடிக் கல்வெட்டு கி. பி. 1163-க்கு உரியதாகும். எனவே சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் சில ஆண்டுகள் அமைச்சராக இருந்து ஒய்வுபெற்று, இரண்டாம் இராசராச சோழனுடைய காலத்தில் சோழ நாட்டிலேயே வாழ்ந்திருந்தவராதல் கூடும் என்றும், அங்ஙனம் வாழ்ந்த பொழுது திருமழபாடி முதலிய தலங்களில் அறங்கள் புரிந்தாரென்றும் கொள்ளலாம். (மு. ரா. சாசனத்தமிழ்க்கவி சரிதம்.)

சேக்கிழாரும் திருநாகேச்சுரமும்

சேக்கிழாருக்குச் சோழ நாட்டுத் திருநாகேச்சுரத்து எம்பெருமான் மீது மிக்க அன்புண்டு. அவர் அத்தலத்தைத் தனக்குரிய அபிமானத் தலமாகவும், ஆன்மார்த்த தலமாகவும் கொண்டார்; அத்தலத்திலே பலகாலும் தங்கியிருந்து பல திருப்பணிகள் செய்துள்ளார். அத்தலத் திருக்கோயில் உட்பிராகாரம் தென் புறத்தில் சேக்கிழார், அவர் தம்பி பாலருவாயர், அவர் தாயார் ஆகிய மூவ உருவங்களும் எழுந்தருளுவிக்கப் பெற்று, வழி-