பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

நம்பிராட்டியாரான அரியபிள்ளை "திருவல்ல முடைய நாயனர்க்கு வைத்த சந்தி விளக்கொன்றும்" (M. E. R. No. 446 of 1912-Sii Vol IIL No. 62) என்றும் காஞ்சிபுரத்து ஏகாம்பர நாதர் கோயிலில் கண்ட மூன்றாம் குலோத்துங்கனின் 27-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில்,

"ஸ்ரீமத் குவளாலபுர பரமேஸ்வரன் கங்க குலோற்பவன சிய்யகங்கன் அமராபரணான திருவேகம்ப முடையான் வைத்த திருநுந்தா விளக்கு ஒன்றுக்குப் பசு முப்பத்திரெண்டு ரிஷபம் ஒன்று’ (10 of 1893 Si Wol IV No. 823) என்றும், திருக்காளத்தியிலுள்ள மூன்றாம் குலோத்துங்கனுடைய மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில், “குவளாலபுர பரமேஸ்வர சீயகங்கரான சூரநாயகர்’ (195 of 1892 Vol IV 643) என்றும்,

திருக்காளத்தியில் உள்ள மூன்றம் குலோத்துங்க சோழனின் 34-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில்,

"உடையார் திருக்காளத்தியுடையார்க்குக் குவளால பரமேஸ்வரன் கங்ககுலோத்தமன் சூரநாயகன் திரு வேகம்பமுடையானான அமராபரணன் சீயகங்கன்" (116 of 1922) என்றும் காணப்படும் பகுதிகளிலிருந்து சீயகங்கன் என்ற இக்குறுநில மன்னனைப் பற்றி அறிய வருகிறது. மேற்கண்ட கல்வெட்டுக்களிலிருந்து இச்சீயகங்கனுக்கு இயற்பெயர் திருவேகம்பமுடையான் என்பது என்றும், சூரநாயகன், அமராபரணன் என்பன இவனுக்குரிய சிறப்புப் பெயர்கள் என்றும் அறியலாம். இச்சீயகங்கனின் கல்வெட்டுக்கள் மூன்றம் குலோத்துங்க சோழனின் மூன்றாம் ஆட்சியாண்டு முதல் முப்பத்து-