பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

சிறப்புப்பெயர் அளிக்கப்பெற்றவன் (164, 165. 1929); இவன் குவளாலத்தினின்று[1] போந்தவன் (166 of 1929; 291 of 1917); வேளாள குலத்தவன்; பெருங் கொடையாளி. இவன் முதலாம் இராச ராசசோழனது மூன்றாம் ஆட்சியாண்டில் விக்கிரமசோழ மகாராசன் என்று குறிக்கப்பெற்றிருப்பினும், மும்முடிச்சோழப்[2] பெருந்தரம் ஒன்றும் வழங்கப்பெற்றன். இனி இராசராசனது 7ஆம் ஆட்சியாண்டில் இவன் ராசராசப்பல்லவரையன் என்று குறிக்கப்பெற்றிருக்கிறான் என்று அறியப்படுதலின், இராசராசனும் தன் பெருந்தரத்து அதிகாரிகளில் ஒருவனை இப்பழுவூர்நக்கனுக்கு இப்பட்டம் அளித்துச் சிறப்புச் செய்தனன் என்பது தெள்ளிது.

சிவத் தொண்டுகள்

அம்பலவன் பழுவூர்நக்கன் விசயமங்கைத் திருக்கோயிலைக் கல்லால் கட்டுவித்தமையோடு ஸ்ரீவிமானத்தையும் கல்லால் கட்டுவித்து (165 of 1929), நெடுவாயில் என்ற ஊரைத் தானமாக அளித்தான். இக்கோயிலில் - நான்கு வேளைகளிலும் திருவமுதுக்கு அரிசிக்கும், பொறிக்கறியமுது, நெய்யமுது, தயிரமுது, அடைக்காயமுது, சந்தனம், கற்பூரம் ஆகியவற்றுக்கும், ஆடியருளப் பாலுக்கும், ஆடைக்கும் நுந்தா விளக்கு ஐந்தினுக்கும், சிறுகாலை எட்டு-உச்சியம்போது எட்டு-இரவுக்-


  1. குவளாலம் - கோலார்.
  2. மும்முடிச்சோழன் என்பது முதலாம் இராசராசனுக்கு வழங்கிய சிறப்புப் பெயர்களில் ஒன்று.